நல்ல நட்பை கொச்சைப்படுத்திடீங்க.. திருநங்கை கொடுத்த புகாருக்கு நாஞ்சில் விஜயன் பதில்!

Nanjil Vijayan : தனியார் தொலைக்காட்சியில் பிரபல காமெடியனாக இருந்து வருபவர் நாஞ்சில் விஜயன். இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளர், காமெடியன் என பங்கேற்று வருகிறார். சமீபத்தில் திருநங்கை ஒருவர் கொடுத்த புகாரின் பெயரில், இவர் மீது குற்றசாட்டு எழுந்த நிலையில், தனது மனைவி மரியாவுடன் நாஞ்சில் விஜயம் விளக்கம் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நல்ல நட்பை கொச்சைப்படுத்திடீங்க.. திருநங்கை கொடுத்த புகாருக்கு நாஞ்சில் விஜயன் பதில்!

நாஞ்சில் விஜயன்

Published: 

12 Sep 2025 12:09 PM

 IST

தமிழில் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல காமெடியனாக இருந்து வருபவர் நாஞ்சில் விஜயன் (Nanjil Vijayan). இவர் கலக்கப்போவது யாரு போன்ற பல ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றிருக்கிறார். மேலும் சினிமாவில், ஆர்யாவின் நடிப்பில் வெளியான கஜினிகாந்த் மற்றும் நாடு போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் மீது சமீபகாலாமாக தொடர்ந்து சில புகார்கள் எழுந்துவரும் நிலையில், அண்மையில் திருநங்கை (Transgender) ஒருவர், நாஞ்சில் விஜயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்திருந்தார். 5 வருடமாக நானும், நாஞ்சில் விஜயனும் காதலித்து வந்தோம் என்றும், தன்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி பாலியல் ரீதியியாகவும் தன்னை பயன்படுத்தியதாகவும் அவர் புகார் கொடுத்திருந்தார். இந்த விஷயமானது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சர்ச்சையை தொடர்ந்து, நாஞ்சில் விஜயனும் ஆரம்பத்தில் எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை.

தொடர்ந்து , திருநங்கை வைஷூ தொடர்பான புகார் மக்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது நாஞ்சில் விஜயன் தனது மனைவி மரியாவுடன் விளக்கம் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். நாஞ்சில் விஜயன் மற்றும் அவரின் மனைவி மரியா இருவரும் கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் படிங்க :  நான் காதல் படங்களில் நடித்தால் அது இப்படி மட்டும் தான் இருக்கும் – நடிகர் அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்!

இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கை கொடுத்த புகாருக்கு, மனைவியுடன் விளக்கம் கொடுத்த நாஞ்சில் விஜயன் கூறிய விஷயம் குறித்து பார்க்கலாம்

திருநங்கையின் புகாருக்கு விளக்கம் கொடுத்த நாஞ்சில் விஜயன் :

அந்த நிகழ்ச்சியில் நாஞ்சில் விஜயன் மற்றும அவரின் அமணிவி மரியா இருவரும் இணைந்து பேசியுள்ளனர். அதில், ” ஏன் வைஷூ இப்படி பண்ணினீங்க, என் கணவரை இப்படி கொச்சை படுத்திடீங்க, எங்களால் வெளியே தலை காட்ட முடியவில்லை. எங்க ரெண்டு பெரு நடுவுல பிரச்சனை வரத்துக்காக இப்படி பண்ணுறீங்களா?. என நாஞ்சில் விஜயன் மனைவி கூறியுள்ளார்.

இதையும் படிங்க :  பிரமாண்ட இயக்குநர் சங்கருக்கு இப்போ இருக்கும் இயக்குநர்கள் யாரை பிடிக்கு? அவரே சொன்ன லிஸ்ட்

மேலும் பேசிய நாஞ்சில் விஜயன், எனக்கும் வைஷுவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை அவரை நான் தோழியாக மற்றும் சகோதரியாகத்தான பார்த்தேன். என் மீது அவர் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்றும், வைஷுவிற்கு சரியான வழிநடத்துதல் இல்லை, அதனால்தான் இவ்வாறு தவறான விஷயங்களை கூறிவருகிறார்” என நாஞ்சில் விஜயன் அந்த நேர்காணலில் கூறியுள்ளார். இந்த தகவலது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோ பதிவு :

நாஞ்சில் விஜயன் குறித்து திருநங்கை வைஷு, ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தார். அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை அவர் ஆதாரமாக காட்டியிருந்தார்.

மேலும் நாஞ்சில் விஜயனும், வைஷுவை ஒரு சகோதரியாகத்தான் பார்த்தேன் என்று மற்றபடி எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோவில் கீழ் மக்களும் பல்வேறு கருத்துக்கதையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.