வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்… 13 ஆண்டுகளை நிறைவு செய்தது நடிகர் நானியின் நான் ஈ படம்!

Naan EE Movie: நடிகர்கள் நானி மற்றும் சமந்தா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் நான் ஈ. தெலுங்கில் ஈகா என்ற பெயரில் உருவான இந்தப் படம் தமிழில் நான் ஈ என்று டப் செய்து வெளியிடப்பட்டது. இந்த நிலையில் படம் வெளியாகி தற்போது 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றனர்,

வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்... 13 ஆண்டுகளை நிறைவு செய்தது நடிகர் நானியின் நான் ஈ படம்!

நான் ஈ

Published: 

06 Jul 2025 16:57 PM

இயக்குநர் ராஜமௌலி (Rajamouli) தெலுங்கு மொழியில் எழுதி இயக்கிய படம் ஈகா. இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தான் நான் ஈ என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் நானி நாயகனாக நடிக்க நடிகை சமந்தா ரூத் பிரபு நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கிச்சா சுதீப், ஆதித்யா, சந்தானம், ஸ்ரீநிவாச ரெட்டி, தேவதர்ஷினி, கிரேசி மோகன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். ஃபேண்டசி ஆக்‌ஷன் பாணியில் உருவான இந்தப் படம் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்ததைப் படக்குழு கொண்டாடி வருகின்றது.

ராஜமௌலியின் ஃபேண்டசி படமான நான் ஈ-யின் கதை என்ன?

நடிகர் நானி தனது பக்கத்து வீட்டில் இருக்கும் நடிகை சமந்தாவை ஒருதலையாக காதலித்து வருவார். சமந்தாவை இம்ப்ரெஸ் செய்வதற்காக நானி பல முயற்சிகளில் ஈடுபடுவார். அவர் செய்யும் கியூட்டான விசயங்களைப் பார்த்து ஒரு கட்டத்தில் நடிகை சமந்தாவிற்கும் நானி மீது காதல் ஏற்பட்டுவிடும்.

இந்த சூழலில் நடிகை சமந்தாவின் ஸ்டார்டப் பிசினஸ் விசயமாக நடிகர் கிச்சா சுதீப்பை சந்திக்க சென்று இருப்பார். அங்கு சமந்தாவைப் பார்த்ததும் கிச்சா சுதீப்பிற்கு அவர் மீது காதல் ஏற்பட்டுவிடும். ஆனால் சமந்தாவிற்கு நானி மீது இருக்கும் காதலை தெரிந்ததும் கிச்சாவிற்கு நானி மீது கோபம் ஏற்படுகின்றது.

இதன் காரணமாக நானியை அடியாட்களை வைத்து கொலை செய்துவிடுகிறார் கிச்சா சுதீப். இதனைத் தொடர்ந்து நடிகர் நானியை காணாமல் சமந்தா காதல் தோல்வியடைந்த மனநிலையில் இருந்து வருவார். உயிரிழந்த நானி மறுபிறவியில் ஈ-யாக பிறக்கிறார். அவர் சமந்தாவிடம் தான் கொலை செய்யப்பட்டதையும் அதை செய்தது கிச்சா சுதீப் என்று தெரிவிக்கவே பெரும் கஷ்டப்படுவார்.

பிறகு சமந்தாவும் ஈயாக இருக்கும் நானியும் இணைந்து கிச்சா சுதீப்பை பழிவாங்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் எப்படி கிச்சா சுதீப்பை பழிவாங்குகிறார்கள் என்பதே படத்தின் கதை. வித்யாசமான கதையில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நான் ஈ படங்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: