Nagarjuna : குபேராவில் ராஷ்மிகாவின் நடிப்பு எனக்கு ஸ்ரீதேவியை நினைவுபடுத்தியது – நாகார்ஜுனா!
Nagarjuna Praises Rashmika Mandanna : தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் நாகார்ஜுனா. தனுஷ் மற்றும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குபேரா. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு ஸ்ரீ தேவியைப் போல இருந்ததாக நாகார்ஜுனா பேசியுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா
நடிகர் தனுஷின் (Dhanush ) முன்னணி நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியானது குபேரா (Kuberaa). இந்த படமானது தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. இந்த படத்தில் தனுஷ் முன்னணி நாயகனாக நடிக்க அவருடன், நடிகர் நாகார்ஜுனாவும் (Nagarjuna) முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படமானது கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்துள்ளார். இதில் அவர் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். ராஷ்மிகாவின் மாறுபட்ட நடிப்பும் இப்படத்திற்கு பக்கபலமாக இருந்தது. கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியான இப்படமானது முதல் நாளிலே உலகளாவிய வசூலில் சுமார் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
அதைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றிவிழாவும் சமீபத்தில் நடைபெற்றது. அதில் குபேரா படக்குழு அனைவரும் கலந்துகொண்டனர். அதில் பேசிய நடிகர் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பை, நடிகை ஸ்ரீ தேவியின் (Sridevi) நடிப்புடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகாவின் நடிப்பைப் பாராட்டிய நாகார்ஜுனா :
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாகார்ஜுனா ஆரம்பத்தில், தனுஷ், சேகர் கம்முலா என அனைவரையும் பற்றிப் புகழ்ந்து பேசியிருந்தார். மேலும் அவர் ராஷ்மிகா மந்தனாவை பற்றியும் புகழ்ந்து பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாகார்ஜுனா, “குபேரா திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பைப் பற்றிப் பேசிய ஆகவேண்டும். இந்த இடத்தில் அவரின் நடிப்பைப் பார்க்கும்போது, “க்சண க்சணம்” என்ற படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பை எனக்கு நினைவுபடுத்துகிறது. மேலும் ராஷ்மிகாவிற்கு நேஷனல் கிரஷ் என்று பெயர் கிடைத்ததில் எந்தவித ஆச்சரியமும் இல்லை” என்று நடிகர் நாகார்ஜுனா பேசியிருந்தார்.
நாகார்ஜுனா பேசியது குறித்து குபேரா படக்குழு வெளியிட்ட பதிவு :
Candids like these…
Can see the success in their eyes and smiles!♥️#MegaBlockbusterKuberaa Success Meet – LIVE NOW🟥 https://t.co/bhkTKGNrXs#MegaBlockBusterKuberaa #Kuberaa #KuberaaSuccessMeet #BOXOFFICEKuberaa #SekharKammulasKuberaa pic.twitter.com/QDxMG0YwCF
— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 22, 2025
குபேரா படத்தின் மொத்த வசூல் :
தனுஷின் 51வது திரைப்படமாக வெளியாகியிருந்த இப்படத்தில் அவர் பிச்சைக்காரனாகவே நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷ் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு தேசிய விருது கொடுக்கலாம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த படமானது வெளியாகி சுமார் 5 நாட்களைக் கடந்த நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் படு வைரல். இந்நிலையில், 5 நாட்கள் முடிவில் இந்த குபேரா படமானது உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. மேலும் இன்னும் இப்படத்தில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.