Mrunal Thakur: ‘அதைக் கேட்பதில் தனக்கு ஒருபோதும் வெட்கம் இருந்ததில்லை’ – மிருணாள் தாக்கூர் பேச்சு!

Mrunal Thakur About Isnt Shy To Asking Roles: பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக கலக்கிவருபவர் மிருணாள் தாக்கூர். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், சினிமாவில் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்பதில் ஒருபோதும் வெட்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Mrunal Thakur: அதைக் கேட்பதில் தனக்கு ஒருபோதும் வெட்கம் இருந்ததில்லை - மிருணாள் தாக்கூர் பேச்சு!

மிருணாள் தாக்கூர்

Published: 

17 Feb 2026 18:36 PM

 IST

இந்தியில் ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நெருக்கமானவர் நடிகை மிருணாள் தாக்கூர் (Mrunal Thakur). அதிலும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பான, “இனிய இருமலர்கள்” என்ற சீரியலின் மூலம் தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமானார். அந்த வகையில் சீரியலில் நடித்துவந்த இவர் சினிமாவிலும் நடிக்க ஆர்வம் கொண்ட நிலையில், ஆரம்பத்தில் இந்தி மொழியில் படங்களில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்துவந்தார். பின் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்திருந்தார். அந்த வரிசையில் இவருக்கு தென்னிந்திய மக்கள் மத்தியில் கதாநாயகியாக பிரபலத்தை கொடுத்த திரைப்படம் சீதா ராமம் (Sita Ramam). 2022ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இயக்கியிருந்தார். இதில் துல்கர் சல்மானுக்கு (Dulquer Salmaan) ஜோடியாக நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் தற்போது தமிழிலும் கதாநாயகியாக நுழையவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், சினிமாவின் ஆரம்பத்தில் இயக்குநர்களிடையே நடிக்க வாய்யப்பு கேட்டது குறித்து மனம் சிறந்துள்ளார்.

இதையும் படிங்க: ரியோ ராஜின் பிறந்தநாள்.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘ராம் இன் லீலா’ படக்குழு!

சினிமாவின் ஆரம்பகாலத்தில் வாய்ப்பு கேட்டது குறித்து மிருணாள் தாக்கூர் பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மிருணாள் தாக்கூர், தனது தொழிலில் குடும்ப தொடர்புகளைக் கொண்டிருப்பதை விட, கடின உழைப்பின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை எவ்வாறு முன்னேறினார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் இயக்குநர்களிடம் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்பதில் தனக்கு ஒருபோதும் வெட்கப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார். மேலும் பேசிய மிருணாள் தாக்கூர், “தான் நடிக்கத் தொடங்கியபோது, ​​நடிக்கும் வாய்ப்பு தன் மடியில் மட்டும் வந்து சேராது என்பதை உணர்தேன். நான் தைரியமாக இருக்க வேண்டும், இயக்குநர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும், “ஒரு நாள் என்னை நடிக்க வைக்க வேண்டும்!” என்று சொல்ல வேண்டும் என நினைத்தேன்.

இதையும் படிங்க: தமிழ் நாட்டில் தாய் கிழவி படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

அப்படி நான் முதலில் அணுகியவர்களில் ஒருவர், இயக்குநர் ஆதித்யா தார் (துரந்தர் பட இயக்குநர்) . நான் அப்போது கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தாலும், அந்த நேரத்தில் தன்னை எப்படி முன்னிறுத்துவது என்பதை பற்றி தெரியாவிட்டாலும், அந்த முயற்சியை எடுத்ததில் பெருமைப்படுகிறேன்” என அதில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நடிகை மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :

நடிகை மிருணாள் தாக்கூர் தெலுங்கு, இந்தி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இதைத் தொடர்ந்து இவர் தமிழிலும் புது படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சிலம்பரசனின் STR51 வது படத்தில் அவருக்கு ஜோடியா நடிக்க மிருணாள் தாக்கூரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறதாம். இப்படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!