Mohanlal: ரஜினியின் ஜெயிலர் 2 பட ஷூட்டிங்கை முடித்த மோகன்லால்? – வைரலாகும் தகவல்!
Jailer 2 Shooting: மலையாள திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் மோகன்லால். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், ஜெயிலர் 1 படத்தில் நடித்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 படத்திலும் நடித்துவந்தார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கை முழுவதுமாக அவர் முடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோகன்லால் ஜெயிலர் 2 திரைப்படம்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக, சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் மோகன்லால் (Mohanlal). இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்துவருகிறார். இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் ரஜினிகாந்த் (Rajinikanth) போன்ற பிரபலங்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். அந்த விதத்தில் தமிழில் இவர் சமீபத்தில் நடித்திருந்த படம் ஜெயிலர் 1 (Jailer 1). இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்த நிலையில், பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த ஜெயிலர் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்க, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் “ஜெயிலர் 2” (Jailer 2) படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருந்தது.
இதில் ஜெயிலர் 1 படத்தில் நடித்த பலரும் மீண்டும் நடித்துவரும் நிலையில், மோகன்லால் அதே “மேத்தீவ்” வேடத்தில் நடிக்கிறார். இவர் கடந்த சில நாட்களாக ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் இருந்த நிலையில், தற்போது அவரின் கதாபாத்திரத்தின் ஷூட்டிங்கை முழுவதுமாக நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அட்லீ – அல்லு அர்ஜுனின் AA22xA6.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கை மோகன்லால் முடித்து குறித்து வைரலாகும் பதிவு:
ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்தவருகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், சிவராஜ்குமார், விநாயகன், யோகி பாபு, மோகன்லால் மற்றும் ஷாருக்கான் என பான் இந்திய பிரபலங்கள் நடித்துவருகின்றனர். மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படமானது தயாராகிவரும் நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.
இதையும் படிங்க: எளிமையான கிராம வாழ்க்கையை விரும்பும் பிரபு தேவா – அவரே வெளியிட்ட வீடியோவை பாருங்க!
இந்த படத்திற்கு அனிருத் இசையமித்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் எல்லாமே சிறப்பாக வந்திருக்கிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் இப்படமானது வரும் 2026 ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.