பிரேமலு 2 படம் கைவிடப்பட்டதா? நடிகர் மேத்யூ தாமஸ் விளக்கம்!
Actor Mathew Thomas: மலையாள சினிமாவில் இளம் நடிகர்களின் பட்டியளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மேத்யூ தாமஸ். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் பிரேமலு 2 குறித்து மேத்யூ தாமஸ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேத்யூ தாமஸ்
மலையாள சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருகிறார் நடிகர் மேத்யூ தாமஸ் (Actor Mathew Thomas). இவர் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழிலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதன்படி லியோ படத்தில் நடிகர் விஜயின் மகனாக நடித்து தமிழக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு இயக்குநர் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் மேத்யூ தாமஸின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழில் 2 படங்களில் மட்டுமே நடிகர் மேத்யூ தாமஸ் நடித்து இருந்தாலும் மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
அதன்படி மேத்யூ தாமஸ் நடிப்பில் மலையாள சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லவ்லி. ஃபேண்டசி காமெடிப் பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மேத்யூ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் நெல்லிக்கம்போயில் நைட் ரைடர்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் நௌஃபல் அப்துல்லா இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நேற்று 10-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
பிரேமலு 2 படம் கைவிடப்பட்டதா?
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மேத்யூ தாமஸ் பிரேமலு 2 படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது இணையத்தில் சில தகவல்கள் பரவி வருகின்றது பிரேமலு 2 படம் கைவிடப்பட்டதாக. ஆனால் படம் அப்படி எல்லாம் கைவிடப்படவில்லை.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் வேறு ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் கவனம் செலுத்தி வருவதால் பிரேமலு 2 படம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் கைவிடப்படவில்லை என்பதை உறியாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… புஷ்பா 3 படத்திற்கு முன்பாக பிரபல நடிகருடன் இணையும் இயக்குநர் சுகுமார் – உற்சாகத்தில் ரசிகர்கள்
இணையத்தில் கவனம் பெறும் மேத்யூ தாமஸின் பேச்சு:
Mathew Thomas confirmed that Premalu 2 hasn’t been shelved, it’s just delayed, as the team is planning a bigger film on a larger canvas❗ pic.twitter.com/FY5XzET0fF
— Mohammed Ihsan (@ihsan21792) October 10, 2025