தென்னிந்திய சினிமாவில் என் கெரியரை முடித்த படம் அது… நடிகை மனிஷா கொய்ராலா ஓபன் டாக்
Manisha Koirala: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 90களில் வலம் வந்தவர்தான் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் தனது கெரியரை முடித்து வைத்த படம் என்று அவர் சொன்ன ஒரு படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மனிஷா கொய்ராலா
நடிகை மனிஷா கொய்ராலா (Actress Manisha Koirala) நேபாள மொழியில் 1989ம் ஆண்டு பெரி பெட்டாலா என்ற படத்தில் ஒரு பெயரிடப்படாத கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவரை நடியகையாக அறிமுகம் ஆக்கியது இந்தி சினிமாதான். 1991-ம் ஆண்டு முதல் இந்தியில் நாயகியாக பல படங்களில் நடித்து வந்த நடிகை மனிஷா கொய்ராலா 1995-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். இவர் தென்னிந்திய மொழிகளில் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களிலும் நாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகை மனிஷா கொய்ராலா தனது தென்னிந்திய சினிமா வாழ்க்கையை முடித்து வைத்தப் படம் இது தான் என்று வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமா கெரியரை முடித்து வைத்தப் படம்:
நடிகை மனிஷா கொய்ராலா முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய போது அந்தப் படத்தில் நடித்தால் தனக்கு நிச்சயமாக கெரியர் முடிந்துவிடும் என்று நான் நினைத்தேன். அதுதான் பின்னாட்களில் நடந்தது என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார். அப்படி அவர் கூறிய படம் பாபா படம் தான்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பாபா. இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நாயகியாக நடிகை மனிஷா கொய்ராலா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கவுண்டமணி, சுஜாதா, ஆஷிஷ் வித்யாத்ரி, நம்பியார் விஜயகுமார் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தோல்வியையே சந்தித்தது. இந்தப் படத்தில் நடித்ததால் தான் தென்னிந்திய சினிமாவில் தனது கெரியர் முடிந்துவிட்டதாக நடிகை மனிஷா கொய்ராலா வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழில் மனிஷா கொய்ராலா நடிகையாக அறிமுகம் ஆனப் படம்:
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான படம் பம்பாய். இதில் நடிகர் அரவிந்தசாமி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மனிஷா கொய்ராலா நாயகியாக நடித்து இருந்தார். இது நடிகை மனிஷா கொய்ராலா தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடிகை மனிஷா கொய்ராலா தமிழ் சினிமாவில் நடித்த இந்தியன் மற்றும் முதல்வன் ஆகிய படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. பாபா படத்தின் தோல்விக்கு பிறகு நடிகை மனிஷா கொய்ராலா நாயகியாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.