டாக்ஸிக் காதலால் ஏற்படும் சிக்கல்… இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது மணிகண்டனின் லவ்வர் படம்

2 Years Of Lover Movie: கோலிவுட் சினிமாவில் மக்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் லவ்வர் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

டாக்ஸிக் காதலால் ஏற்படும் சிக்கல்... இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது மணிகண்டனின் லவ்வர் படம்

லவ்வர் படம்

Published: 

09 Feb 2026 11:53 AM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் மணிகண்டன். தொடர்ந்து நடிகர் மணிகண்டன் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 09-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் லவ்வர். இந்தப் படத்தினை இயக்குநர் பிரபாகரன் வியாஸ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலம் பிரபாகரன் வியாஸ் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடித்து இருந்தார்.

மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், ஹரிணி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 2 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு செய்த நிலையில் படக்குழு கொண்டாடி வருகின்றது.

இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த லவ்வர் படம்:

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்று MRP என்டர்டெயின்மென்ட் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் தயாரிப்பாளர்கள் யுவராஜ் கணேசன், மகேஷ் ராஜ் பசிலியன், நஸரத் பாசிலியன் தயாரிப்பில் வெளியான லவ்வர் படத்தை மக்கள் கொண்டாடினர். ஒரு டாக்ஸிக் ரிலேஷன்பிப் அந்த காதலர்களின் வாழ்க்கையை எந்த அளவிற்கு சிக்கலில் கொண்டு செல்லும் என்பதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது. இதில் காதலில் இருக்கும் இரண்டு நபர்கள் தங்களுல் உண்மையாக இல்லை என்றாலும், ஒருவர் மீது மற்றவர் அளவுகடந்த பொசசிவாக இருப்பதால் ஏற்படும் சிக்கல்களையும் வெளிப்படையாக இந்தப் படம் பேசியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் மணிகண்டனின் நடிப்பை இந்தப் படத்தில் ரசிகர்கள் பாராட்டி தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… Karathey Babu: ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ பட ஷூட்டிங் நிறைவு.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

லவ்வர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நாளை திரையரங்குகளில் வெளியாகும் வித் லவ் படம்… பிரிவியூ ஷோ பார்த்தவர்களின் விமர்சனம் இதோ

150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்