விஜய் ஆண்டனி எழுதி, இசையமைத்து, பாடிய மனசு வலிக்குது பாடல் வெளியானது

Manasu Valikithu Break-up Anthem | இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் நடிகர் அஜய் திஷன் நடிப்பில் உருவாகி வரும் படம் பூக்கி. இந்தப் படத்தில் இருந்து மனசு வலிக்குது என்ற பிரேக் அப் ஆந்தம் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் ஆண்டனி எழுதி, இசையமைத்து, பாடிய மனசு வலிக்குது பாடல் வெளியானது

பூக்கி

Published: 

26 Nov 2025 16:39 PM

 IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை உடையவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இவர் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இவர் நாயகனாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் நடிக்கும் படங்களை இவரே தயாரித்து தொடர்ந்து இசையமைத்தும் வந்தார். அதன்படி விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளியான மார்கன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் விஜ்ய ஆண்டனியின் அக்கா மகன் அஜய் திஷன் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்ற நிலையில் அடுத்ததாக பூக்கி என்ற படத்தில் நாயகனாக இவர் தற்போது நடித்து வருகிறார். அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் சந்திரா எழுதி இயக்கி உள்ளார். இதில் நடிகை ஆர்கே தனுஷா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு,
இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி,
பிக் பாஸ் சத்யா, எம்.ஜே ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷர்மி, பிரியங்கா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பூக்கி படத்திலிருந்து வெளியானது மனசு வலிக்கு பாடல் வெளியானது:

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூக்கி படத்தில் இருந்து மனசு வலிக்கு என்ற ப்ரேக் அப் ஆந்தம் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள நிலையில் இந்தப் பாடலை எழுதி அவரே பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… அரசன் படத்தில் சிலம்பரசனுடன் இணைந்த விஜய் சேதுபதி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வெளியீட்டிற்கு 50 நாட்களே உள்ள பராசக்தி படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

அனு தாக்குதல்களை தாங்கக் கூடிய செயற்கை மிதக்கும் தீவை உருவாக்கும் சீனா
தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ராமர் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?
ஓடும் ரயிலில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் மேகி சமைத்த பெண்!