துடரும் படத்தின் வசூலை கொண்டாடும் மோகன்லால் – வைரலாகும் எக்ஸ் போஸ்ட்

Mohanlal About Thudarum Movie Collection: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே வெற்றி முகம் என்றே கூறலாம். அவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அனைத்து படங்களும் வசூல் மழை பொழிந்து வருகின்ற நிலையில் சமீபத்தில் வெளியான துடரும் படமும் வசூலை வாரி குவித்து வருகின்றது.

துடரும் படத்தின் வசூலை கொண்டாடும் மோகன்லால் - வைரலாகும் எக்ஸ் போஸ்ட்

மோகன்லால்

Published: 

12 May 2025 06:52 AM

தமிழ் சினிமாவில் தங்களது இடங்களை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இளம் நடிகர்களுடன் போட்டிப்போட்டு நடித்து வருகிறார்கள் நடிகர்கள் கமல் ஹாசனும் ரஜினிகாந்தும். அதே போல மலையாள சினிமாவின் அடையாளங்களான மோகன்லால் (Mohanlal) மற்றும் மம்முட்டி (Mammootty) இருவரும் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களிலாவது நடித்து வருகின்றனர். இளம் நடிகர்களின் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ இவர்களின் நடிப்பில் படங்கள் நிச்சயமாக வெளியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கி 5 மாதங்களே ஆகியுள்ள நிலையில் நடிகர் மோகன்லால் நடிப்பில் இதுவரை 2 படங்கள் வெளியாகிவிட்டது. அடுத்ததாக இந்த ஆண்டு வெளியீட்டிற்காக மட்டும் 4 படங்கள் மோகன்லாலின் நடிப்பில் வெளியாக வரிசையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 25-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையளத்தில் திரையரங்குகளில் வெளியான படம் துடரும். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடிகை சோபனா நாயகியாக நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த நட்சத்திர ஜோடி மீண்டும் இணைந்து நடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கியுள்ள நிலையில் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் வர்மா, ஃபர்ஹான் பாசில், மணியன்பிள்ளை ராஜு, பினு பப்பு, இர்ஷாத் அலி, ஆர்ஷா சாந்தினி பைஜு, தாமஸ் மேத்யூ, கிருஷ்ண பிரபா என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

மலையாளத்தில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து படத்தை தமிழில் டப் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டது. அதன்படி இந்தப் படத்தின் தமிழ் பதிப்பிற்கு தொடரும் என்று பெயர் வைக்கப்பட்டது. படம் மே மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழில் வெளியானது.

நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கத்தில் துடரும் படத்தின் வசூல் நிலவரம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது ரசிகரக்ளிடையே வைரலாகி வருகின்றது. அதில் நடிகர் மோகன்லால் கூறியுள்ளதாவது, சில பயணங்களுக்கு சத்தம் தேவையில்லை, அவற்றை முன்னோக்கி கொண்டு செல்ல இதயங்கள் மட்டுமே தேவை.

துடரும் படம் உலகம் முழுவதும் உள்ள பல மில்லியன் கணக்கான இதயங்களில் இடம்பிடித்துள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் இதுவரை இருந்த அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் முறியடித்துள்ளது. அனைத்து அன்பிற்கும் நன்றி என்று அந்தப் பதிவில் மோகன்லால் தெரிவித்துள்ளார்.