Jana Nayagan: ஜன நாயகன் பட சென்சார் விவகாரம் – வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி!

Jana Nayagan Censor Case Withdrawal: கோலிவுட் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம்தான் ஜன நாயகன். இப்படகுழுவானது சென்சார் வாரியத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Jana Nayagan: ஜன நாயகன் பட சென்சார் விவகாரம் - வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி!

ஜன நாயகன்

Updated On: 

10 Feb 2026 11:38 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது கடந்த 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீசிற்கு 2 நாட்கள் முன்புவரை சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், சென்சார் வாரியத்தின் (Censor Board) மீது ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனம் கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் (K.V.N.Productions) வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கானது கிட்டத்தட்ட 5 விசாரணைக்கு பிறகும் சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சென்சார் போர்ட் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court) மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 10ம் தேதியில் இதை முதல் வழக்காக தனி நீதிபதி பி.டி. ஆஷா தலைமையில் விசாரிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி வாபஸ் வழக்கிற்கு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் ஜன நாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

இதையும் படிங்க: தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் படம் திட்டமிட்டபடி நடக்கும் – அருண் மாதேஸ்வரன்!

ஜன நாயகன் திரைப்படத்தில் சென்சார் வாரியத்திற்கு எதிரான வழக்கு வாபஸ் குறித்து பதிவு:

ஜன நாயகன் வழக்கு வாபஸ் அனுமதிக்கு பின் என்ன நடக்கும் :

இந்த ஜன நாயகன் திரைப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க, தளபதி விஜய் நாயகனாக நடித்துள்ளார். இதில் தளபதி விஜய்யுடன் நடிகர்கள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது தெலுங்கு படமான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் கதைக்களத்தில் தயாராகியுள்ளத்தியது. தற்போது இப்பட தயாரிப்பு நிறுவனம் சென்சார் வாரியத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. மேலும் இப்படமானது சமீபத்தில் மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: ‘இது தியேட்டர் கிடையாதுங்க ப்ளீஸ்’.. ரசிகரிடம் கோபப்பட்ட அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!

இதில் ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லரிலும் சில வசனங்களை மியூட் செய்யும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். மேலும் தற்போது இப்படமானது மறு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இப்படத்திற்கு யு/ஏ அல்லது ஏ சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டால் வரும் 2026 பிப்ரவரி 20ம் தேதி, 26ம் தேதி அல்லது மார்ச் முதல் வாரத்திற்குள் வெளியாகிவிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் புது நம்பிக்கை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லாட்டரியில் ரூ.49 கோடி ஜாக்பாட்… நண்பருடன் பரிசுத் தொகையைப் பகிர முடிவு செய்த கர்நாடக இளைஞர்
வாரத்தின் முதல் நாளே கடுமையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
யூடியூபின் Auto-Dubbing.. இனி கூடுதல் சிறப்புடன் பயனர்களுக்கு வழங்கப்படும்..
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..