இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்… வைரலாகும் புகைப்படங்கள்

Madhampatty Rangaraj Marriage: தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்கஸ் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனவர் மாதம்பட்டி ரங்கராஜன். பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜன் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது இரண்டாவது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்... வைரலாகும் புகைப்படங்கள்

மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா

Published: 

27 Jul 2025 16:43 PM

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மெஹந்தி சர்கஸ். இந்தப் படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமா அறிமுகம் ஆனார் மாதம்பட்டி ரங்கராஜன் (Madhampatty Rangarajan). மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சரவணன் ராஜேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ஸ்வேதா த்ரிபாதி நாயகியாக நடித்து இருந்தார். படத்தில் இளையராஜா (Ilaiyaraaja) ரசிகராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் அவர்களின் ஊரிற்கு சர்கஸ் நடத்த வரும் குழுவின் இருக்கும் ஸ்வேதா த்ரிபாதி மீது காதல் ஏற்படுகின்றது. இவர்களின் காதல் கைகூடாமல் போக இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து பென்குயின் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷின் கணவராக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்:

தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் நடிகராவதற்கு முன்பே மிகப்பெரிய சமையல் கலைஞராக இருந்து வருகிறார். இவரது அப்பா காலத்தில் தொடங்கிய இந்த தொழில் தற்போது இவரது காலத்தில் நாடுகடந்து விரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது படங்களில் எதுவும் நடிக்காத மாதம்பட்டி ரங்கராஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியி கடந்த இரண்டு சீசன்களாக நடுவராக இருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலான நிலையில் இன்று இவரது இரண்டாவது திருமணம் சமூக வலைதளத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Also Read… மதராஸி படம் கஜினி மற்றும் துப்பாக்கி மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன் – ஏ.ஆர்.முருகதாஸ்

சமீபத்தில் இவர் முதல் மனைவியை பிரிந்துவிட்டதாகவும் மாதம்பட்டி ரங்கராஜனின் ஆடை வடிவமைப்பாளருடன் அவர் இணைந்து வாழ்வதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இவர் அதனை மறுத்து இருந்தார். இந்த நிலையில் இன்று மாதம்பட்டி ரங்கராஜன் அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டதற்காக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இணையத்தில் கவனம் பெறும் மாதம்பட்டி ரங்கராஜனின் திருமண புகைப்படங்கள்:

Also Read… இதனால்தான் எனது குடும்ப வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கிறேன் – லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்