Dude – LIK பட ரிலீஸ் சிக்கல்… புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படக்குழு!

Dude VS LIK: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மட்டும் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. அந்த வகையில் டியூட், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது ஒன்றாக வெளியாகவிருந்த நிலையில், வசூல் பாதிக்கும் என LIK படக்குழு நியூ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

Dude - LIK பட ரிலீஸ் சிக்கல்... புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு!

Dude - LIK

Published: 

07 Oct 2025 16:00 PM

 IST

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் இறுதியாக டிராகன் (Dragon) என்ற திரைப்படமானது வெளியானது. அதை தொடந்து, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) மற்றும் டியூட் (Dude) என இரு திரைப்படங்கள் உருவாகி வந்தது. இதில் இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan)  இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி . மேலும் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் (Keerthiswaran) இயக்கத்தில் தயாராகியுள்ள படம் டியூட். இந்த இரு படங்களும் வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த இரு திரைப்படங்ககளும் ஒன்றாக வெளியானால் நிச்சயமாக வசூல்பாதிக்கப்படும் என்ற காரணத்தால், தற்போது தீபாவளி ரேஸில் இருந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது விலகியுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதியையும், விலகியதற்கான காரணம் பற்றியும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : அந்த படத்தை நான் இயக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதீப் ரங்கநாதன்!

புதிய ரிலீஸ் தேதியை வெளியிட்ட லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்பட குழு

அந்த பதிவில், ஒரே ரயில் பாதையில், இரு ரயில்கள் வேகமாக வந்தால் அது பேராபத்தை விளைவிக்கும். அந்த விதத்தில் டியூட் படம் வெளியாக நாங்கள் வழிவிடுகிறோம். எங்கள் ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த தீபாவளி வெற்றியாக அமைய வாழ்த்துகிறோம். எங்கள் படத்திற்கு வழிவிட்டு வேறு தேதியில் டியூட் திரைப்படத்தை வெளியிட மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் பலமுறை வேண்டுகோள் வைத்திருந்தோம், அது பலனளிக்கவில்லை. மேலும் திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில்கொண்டு, இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளோம்.

இதையும் படிங்க : மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!

அதன்படி வரும் 2025 டிசம்பர் 18ம் தேதியில் இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமானது வெளியாகி திட்டமிட்டுளோம். மேலும் வரும் வாரங்களில் படத்தின் பாடல்கள் மற்றும் அப்டேட்டுகள் தொடர்ந்து உங்களை தேடிவரும் என படக்குழு அதிரடி பதிவை வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டியூட் திரைப்படத்தின் படத்தின் அப்டேட் :

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள படம் டியூட். இந்த படத்தின் ஷூட்டிங் எல்லா நிறைவடைந்த நிலையில், வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படமானது மாறுபட்ட காதல் கதைக்களத்துடன் தயாராகியுள்ள நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவருகிறது.