ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற லெனின் பாண்டியன் படக்குழு

Lenin Pandiyan Movie: பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தற்போது தயாரித்து வரும் படம் லெனின் பாண்டியன். இந்தப் படத்தின் நடிகர்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படக்குழு ரஜினிகாந்தை நேரில் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற லெனின் பாண்டியன் படக்குழு

லெனின் பாண்டியன் படக்குழு

Published: 

11 Nov 2025 12:29 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக வலம் வருகிறது சத்ய ஜோதி ஃபிலிம்ஸ். தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இறுதியாக உருவான படம் தலைவன் தலைவி. நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக இந்தப் படத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இயக்குநர் பாண்டியராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் இந்தப் படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்ற்து. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து வரும் இந்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தற்போது லெனின் பாண்டியன் என்ற படத்தை தயாரித்து வருகின்றது.

இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் முன்னணி வேடத்தில் அறிமுகம் ஆகிறார். மேலும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த நடிகை ரோஜா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற லெனின் பாண்டியன் டீம்:

இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் நாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் ஆவார். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கி தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் படக்குழுவினர் தயாரிப்பாளர் என அனைவரும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இனையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… திரையரங்குகளில் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படம்

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்தது லோகா சாப்டர் 1… படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு!