‘வித் லவ்’ பட ரிலீஸ்.. பாடலை பாடி படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த லதா ரஜினிகாந்த்!

Latha Rajinikanth Congratulates With Love Movie Crew: ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வித் லவ். இந்த படம் வெற்றிபெறுவதற்கு, ரஜினிகாந்தின் மனைவியும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் அம்மாவுமான லதா ரஜினிகாந்த், பாடல் பாடி தனது வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

வித் லவ் பட ரிலீஸ்.. பாடலை பாடி படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த லதா ரஜினிகாந்த்!

வித் லவ் படக்குழுவினருக்கு லதா ரஜினிகாந்த் வாழ்த்து

Updated On: 

05 Feb 2026 20:42 PM

 IST

தமிழில் வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதியில் வெளியாகவுள்ள காதல் கதைக்களம் கொண்ட திரைப்படம்தான் வித் லவ் (With Love). இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்க, தயாரிப்பாளரும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தயாரித்துள்ளார். இந்த படத்தில் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth) கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்துள்ளார். இந்த படமானது முழுமையாக பள்ளிப்பருவ காதல் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படமானது 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் கடந்த 2026 பிப்ரவரி 3ம் தேதியில் நடைபெற்றிருந்தது. அப்போது படத்தைப் பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் வித் லவ் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் பாடகியும், ரஜினிகாந்தின் மனைவியுமான லதா ரஜினிகாந்த் (Latha Rajinikanth) பாடல் ஒன்றை பாடியுள்ளார். வித் லவ் படத்தில் இடம்பெற்றிருந்த “மறந்து போச்சே” (Marandhu Poche) என்ற பாடலை பாடி படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: கார்த்தியின் ஜப்பான் பட தோல்வி.. அதன் முழு பொறுப்பு நான்தான் – இயக்குநர் ராஜு முருகன்!

வித் லவ் படக்குழுவிற்கு வலது தெரிவித்து லதா ரஜினிகாந்த் பாடிய வீடியோ பதிவு:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் சிறந்த பாடகர்களில் ஒருவர். இவர் கடவுள் உள்ளமே, காதல் கனவா, நேற்று இந்த நேரம் மற்றும் சூப்பர் ஸ்டார் போன்ற பாடல்களை பாடியுள்ளார். அந்த விதத்தில் பல ஆண்டுகளுக்கு பின் தனது மகளுக்காக, வித் லவ் படத்திலிருந்து “மறந்து போச்சு” என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: வித் லவ் முதல் யோகிடா வரை… இந்த வாரம் தியேட்டரின் என்ன படம் பார்க்கலாம்

வித் லவ் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்கப்படுமா:

இந்த வித் லவ் படத்தின் மூலமாக தான் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவர் மிகவும் அருமையாக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுவருகிறது. இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், இவருக்கும் கதாநாயகியாக இதுதான் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் ஏற்கனவே திரையிடப்பட்ட நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அதன்படி மக்களிடையேயும் நல்ல விமர்சனங்களைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழகான வெற்றிச் சின்னம்... இந்தியா கேட் போட்டோவை பகிர்ந்து டிரம்ப் கருத்து
இந்திய பொருட்களுக்கான அமெரிக்காவின் சுங்க வரி 18 சதவிகிதமாக குறைப்பு
தொண்டையில் சிக்கிய அட்டை பூச்சி - 55 வயது நபரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
ரூ.2 கோடிக்கு அரிய வாகன நம்பர் பிளேட்டை வாங்கிய நபர்..