தனது படங்களை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடும் டி. ராஜேந்தர் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
Actor T Rajendar: கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனவர் டி ராஜேந்தர். சினிமாவில் தனது காலடித் தடம் பதியாத இடம் இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தற்போது தனது படங்களை ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

டி. ராஜேந்தர்
கோலிவுட் சினிமாவில் எழுத்தாளர், இயக்குநர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பண்முகத் தன்மை கொண்டவராக இருப்பவர் டி. ராஜேந்தர் (T.Rajendar). இவர் எழுதி இயக்கி நடித்தப் படங்கள் பல தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நாயகனாக நடிக்க வேண்டும் என்றால் நல்ல உடலமைப்பு, பார்க்க அழகாகவும் என்று இந்த சமூகம் வரையரத்து வைத்துள்ள அனைத்து கட்டமைப்புகளையும் உடைத்து நல்ல கதை நல்ல திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் டி ராஜேந்தர். தனது முக அமைப்பை வைத்து பல இடங்களில் பலர் அவமானப்படுத்தியதாகவும் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே தான் இந்த சினிமா துறையில் சாதித்துக் காட்டியதாகவும் டி ராஜேந்தர் பல பேட்டிகளில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 1980-ம் ஆண்டு டி ராஜேந்தர் எழுதி இயக்கி பாடல் இசையமைத்து வெளியான படம் ஒருதலை ராகம். இந்தப் படத்தின் மூலமாகவே தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர் அறிமுகம் ஆனார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி என தொடர்ந்து படங்களை இயக்கி இசையமைத்து வந்தார். அதனைத் தொடர்ந்து உயிருள்ளவரை உஷா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாயகனாக காட்சியளித்தார் டி ராஜேந்தர். பின்பு தங்கைக்கோர் கீதம், உறவைக் காத்த கிளி என பலப் படங்களை இயக்கி அவரே நாயகனாகவும் நடித்தார். இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரீ ரிலீஸாகும் டி ராஜேந்தரின் ஹிட் படங்கள்:
இந்த நிலையில் சமீபத்தில் டி ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் தனது படங்களை ரீ ரிலீஸ் செய்யும் திட்டத்தில் அவர் இருப்பதாகவும் தொடர்ந்து படங்கள் வெளியாக வேலைகள் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது இயக்கத்தில் வெளியான படங்களைப் பட்டியளிட்ட டி ராஜேந்தர் ஒவ்வொரு படமும் அடுத்தடுத்து திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Also Read… இணையத்தில் கவனம் பெறும் ஜெயிலர் 2 படம் குறித்த முக்கிய தகவல்
தொடர்ந்து பேசிய டி ராஜேந்தார் தற்போது புதிதாக வெளியாகும் படங்களை விட ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்த அவர், நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்த போது புதிதாக வெளியான படங்களைவிட அந்தப் படம் அதிக வரவேற்பைப் பெற்றதைப் பார்த்து தனது படங்களும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்? வைரலாகும் தகவல்