Ken Karunaas: யூத் படம் இவ்வளவு வசூல் செய்யும் என எதிர்பார்க்கவில்லை – வெற்றி விழாவில் கென் கருணாஸ் எமோஷனல் பேச்சு!

Ken Karunaas Emotional Speech: தமிழில் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்தின் மூலமாக மிகவும் வரவேற்பை பெற்றவர் கென் கருணாஸ். இவரின் யூத் திரைப்படமானது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவருகிறது. அந்த விதத்தில் இன்று நடைபெற்ற வெற்றிவிழாவில் பேசிய கென் கருணாஸ், யூத் படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவு பற்றி தெரிவித்துள்ளார்.

Ken Karunaas: யூத் படம் இவ்வளவு வசூல் செய்யும் என எதிர்பார்க்கவில்லை - வெற்றி விழாவில் கென் கருணாஸ் எமோஷனல் பேச்சு!

கென் கருணாஸ்

Updated On: 

31 Mar 2026 18:41 PM

 IST

கோலிவுட் சினிமாவில் எந்தவித போட்டியும் இல்லாமல் கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம்தான் யூத் (Youth). இந்த படத்தை கென் கருணாஸ் (Ken Karunaas) இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாகதான் இவர், இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கென் கருணாஸ் லீட் கதாநாயகனாக நடிக்க, அவருடன் அனிஷிமா அனில்குமார் (Anishma Anilkumar), மீனாட்சி, சுராஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu), தேவதர்ஷினி உட்பட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை பர்வதா என்டென்டயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படமானது உலகளவில் சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அந்த விதத்தில் இன்று 2026 மார்ச் 31ம் தேதியில் இப்படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது பேசிய கென் கருணாஸ், யூத் படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோடிக்கணக்கான மக்களுக்கு ராமர் ஒரு வழிகாட்டும் சக்தியாக இருந்து வருகிறார் – ரன்பீர் கபூர்

யூத் படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவு குறித்து கென் கருணாஸ் பேச்சு:

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய கென் கருணாஸ், “”யூத் படத்திற்கான திரையரங்க வரவேற்பைப் பார்த்தபோது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. எங்க படம் தினமும் இவ்வளவு பணம் வசூலிக்கிறது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் பல விமர்சகர்களின் விமர்சனங்களைப் படித்தேன், எல்லா விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன், அதை எனது அடுத்த படங்களில் நிச்சயமாகச் செயல்படுத்துவேன்.

இதையும் படிங்க: ஏன் தமிழில் பேசவில்லை? கொஞ்சம் டைம் கொடுங்க – கயாடு லோஹர் சொன்ன பதில்!

ஆடியன்ஸ் படத்தை ரசிப்பார்கள் என்று நான் நம்பினேன், ஆனால் அவர்கள் அதைத் தங்களுடைய சொந்தப் படம் போல ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னை ஒரு கதாநாயகனாக்கியதற்கு நன்றி” என அவர் எமோஷனலாக பேசியிருந்தார்.

கென் கருணாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த யூத் படமானது கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. வார இறுதியை கடந்தும், தற்போதும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் பல திரையரங்குகளில் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..