Keerthy Suresh: நான் எடையை குறைக்க செய்த விஷயம் இதுதான்.. உண்மையை கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh's Weight Loss Secret: மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்துவருபவர்த்தஹன் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா என்ற படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இவர் தனது உடல் எடை இழப்பு குறித்து தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்
நடிகர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) பிரபல கதாநாயகியாக இருந்துவருகிறார். மலையாள சினிமாவின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் கதாநாயகியாகவே நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவருக்கு இந்தியில் முதல் படமாக இருந்ததுதான் பேபி ஜான் (Baby John). இந்த படமானது தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக் படம்தான். இந்த படத்தில் அவர் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படம் கடந்த 2024ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியானது. இந்த பத்திற்கு இந்தியில் அந்தளவு வரவேற்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின் தெலுங்கு மொழியில் படங்கள் நடித்துவந்தார். அந்த வகையில் 1 வருடத்திற்கு பின் இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் படம்தான் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita).
இப்படம் வரும் 2025ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதியில் வெளியாகிறது. இதன் காரணமாக இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், தனது எடை இழப்பிற்கு (Weight loss) காரணம் என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார். அவர் 12 கடந்த 8 முதல் 10 உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினி ரசிகர்களுக்கு பிக் சர்ப்ரைஸ்.. ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் இணையும் பாலிவுட் கிங்?
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு:
தனது எடை இழப்பிற்கு காரணம் தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் :
அண்ட் நேர்காணலில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், ” நான் எனது 18வது வயதிலிருந்து உடற்பயிற்சி எதுவும் செய்ததில்லை. நான் சினிமாவிற்குள் வந்தபிறகு நடிக்கும் வேலை, தூக்கம் மற்றும் சாப்பாடு இவை 3ம் தான் என் வாழ்க்கையாகி விட்டது. அந்த நிலையில்தான் நான், உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்தேன். எனது முகம் பராமரிப்பு கூட கிட்டத்தட்ட 4 முதல் 5 வருடமாக செய்துவருகிறேன். மேலும் எனது உடற்பயிற்சியில் முத்தலாக் நான் செய்தது கார்டியோ தான். நானா மிகவும் தீவிரமாக கார்டியோ செய்ததில் தசை இழப்பு ஏற்பட்டு எனது உடல் எடை குறைந்துவிட்டது. இதனால் நான் மிகவும் ஒல்லியாகிவிட்டேன்.
இதையும் படிங்க: பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிவின் பாலி – வைரலாகும் தகவல்
மற்றபடியாக குறுகிய கால டயட் எதுவும் நான் ஃபாலோ செய்யவில்லை.மேலும் தற்போது நான் ப்ரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுகளையும், கார்ப்ஸ் குறைவாக இருக்கும் உணவுகையும் எடுத்துவருகிறேன். மேலும் எனக்கு யோகா மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. அதை நான் முதல் ஒன்றரை மணிநேரம் செய்வேன். தற்போது இதனால் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறேன். மேலும் இதன் காரணமாக உணவுகளில் எந்த கட்டுப்பாடுகளையும் வைக்கவில்லை. எனக்கும் மிகவும் பிடித்த தோசையையே தற்போதும் சாப்பிட்டு வருகிறேன். இட்டபோது எந்த டயட் பிளானும் எனக்கு இல்லை” என அவர் அதில் தெளிவாக தெரிவித்துள்ளார்.