Kavin: மாஸ்க் மக்களுக்கான படம்.. நிச்சயமாக எல்லோருக்கும் புடிக்கும்- கவின் வெளியிட்ட வீடியோ வைரல்!

Kavin Raj X Post: நடிகர் கவின் ராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் நாளை 2025 நவம்பர் 21ம் தேதியில் மாஸ்க் என்ற படம் வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு, ரசிகர்களுக்காக கவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kavin: மாஸ்க் மக்களுக்கான படம்.. நிச்சயமாக எல்லோருக்கும் புடிக்கும்- கவின் வெளியிட்ட வீடியோ வைரல்!

கவின்

Published: 

20 Nov 2025 19:29 PM

 IST

இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) தயாரிப்பிலும், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் (Vikarnan Ashok) இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் மாஸ்க் (Mask). இந்த படத்தில் நடிகர் கவின் (Kavin Raj) கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ருஹானி சர்மா (Ruhani Sharma) நடித்துள்ளார். இவருக்கு இதுதான் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகை ஆண்ட்ரியா (Andrea) நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் கொள்ளை தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், நாளை 2025 நவம்பர் 21 ஆம் தேதியில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை நடிகர் கவின் ராஜ் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகபரவிவருகிறது.

இதையும் படிங்க: எத்தனை படம் பண்ணாலும் என்னால் அந்த அடையாளத்தை மாற்ற முடியல- கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!

மாஸ்க் திரைப்படம் குறித்து ரசிகர்களுக்காக கவின் வெளியிட்ட வீடியோ பதிவு:

இந்த வீடியோவில் நடிகர் கவின், “இந்த மாஸ்க் திரைப்படம், நாளை வெளியாகிறது. இது மக்களுக்கான திரைப்படம். மக்களின் கதையை எடுத்து மக்களுக்காக கொடுக்கவேண்டும் என எடுத்த படம் இது. நிச்சயமாக இந்த படத்தை பார்க்கும்போது, உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். இதற்கு முன் எல்லா படங்களுக்கும் மக்கள் அனைவரும் கொடுத்த அன்பும் ஆதரவும், இப்படத்திற்கும் இருக்கும் என நம்புகிறேன்.

இதையும் படிங்க: பொழுதுபோக்கை பொழுதுபோக்காக மட்டும் பாருங்க.. மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த கவின்!

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்த என்னை, இன்னைக்கும் ஒரு இடம் கொடுத்து அது நல்லபடியாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மக்களாகிய நீங்கள்தான். இதற்காகவே இன்னும் நல்ல படங்கள் பண்ணனும், மக்களுக்காக பண்ணணும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது. மேலும் இந்த மாஸ்க் திரைப்படத்தை தியேட்டர் சென்று பார்த்துவிட்டு, வழக்கம்போல் எப்படி இருகிறது என சொல்லுங்கள் என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

கவினின் புதிய படங்கள்

நடிகர் கவின் இந்த மாஸ்க் படத்தை அடுத்ததாக, நயன்தாராவுடன் இணைந்து நடித்துவரும் ஹாய் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்ததாக கனா காணும் காலங்கள் தொடர் இயக்குநர் கென் ராய் இயக்கத்தில் ஒரு படமும், தந்தட்டி பட இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படம் என தனது கைவசத்தில் 3 திரைப்படங்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?
2,860 கி.மீ நீளமுள்ள டானூப் நதி.. 10 நாடுகள் வழியாக பாயும் ஒரே நதி..
இறந்தவர்கள் உடலில் ரத்த ஓட்டத்தை கொண்டு வந்து உறுப்பு தானம் செய்த மருத்துவர்கள்.. ஆசியாவிலேயே புதிய முயற்சி!!
கூகுளின் டிரைவர் இல்லாமல் இயங்கும் காரால் பறிபோன பூனையின் உயிர்