Karthi : மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத நபர்.. ரவி மோகன் குறித்து கார்த்தி உருக்கம்!

Karthi About Ravi Mohan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் இன்று 2025, ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெற்ற ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டார். அதில் பேசிய கார்த்தி, நடிகர் ரவி மோகனை பற்றி உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Karthi : மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத நபர்.. ரவி மோகன் குறித்து கார்த்தி உருக்கம்!

கார்த்தி மற்றும் ரவி மோகன்

Published: 

26 Aug 2025 16:06 PM

நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் மெய்யழகன் (Meiyazhagan). இந்த படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்க, நடிகர் சூர்யா (Suriya) தயாரித்திருந்தார். இந்த படத்தை அடுத்து நடிகர் கார்த்தி தொடந்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட சர்தார் 2 மற்றும் வா வாத்தியார் என இரு படங்ககள் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இப்படத்தை அடுத்ததாக மார்ஷல் என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று 2025, ஆகஸ்ட் 26 ஆம் தேதியில் நடைபெற்ற ரவி மோகனின் (Ravi Mohan) தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்கவிழாவில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ரவி மோகன் மற்றும் கார்த்தி நீண்ட கால நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிலையில், நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, நடிகர் ரவி மோகன் பற்றியும் அவரின் தயாரிப்பு நிறுவனம் பற்றியும் ஓபனாக பேசியிருந்தார். அவர் பேசியது பற்றி தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : கமலை திடீரென சந்தித்த ஜெயம் ரவி.. என்ன விஷயம் தெரியுமா?

ரவிமோகன் குறித்து பேசிய நடிகர் கார்த்தி

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய கார்த்தி, ரவி மோகன் பற்றி உருக்கமாக பேசியிருந்தார். இவர் பேசியதைக் கேட்ட நடிகர் ரவி மோகன் கண்கலங்கினார். அதில் நடிகர் கார்த்தி, ” ரவி மோகனிடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம், அவர் மனதளவு கூட யாருக்கும் கெடுதல் நினைக்காத ஒரு நபர். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இன்று சினிமாவில் அவர் வந்திருக்கும் தூரம் மிகவும் அருமையாக இருக்கிறது, அவரின் படத்தின் கதையை பற்றி என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார்.

இதையும் படிங்க : யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ரவி மோகன் குறித்து நடிகர் கார்த்தி பேசிய வீடியோ

மேலும் அவர் இயக்கி , நானும் அவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவேண்டும் என ஏற்கனவே பேசியிருந்தோம். அப்போது விளையாட்டிற்கு பேசியிருந்தோம், தற்போது அவர் சீரியஸாக இயக்குநராக களத்தில் இறங்கவுள்ளார் ரவி. அவர், யோகி பாபுவை வைத்து படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தில் தெரிந்திவிடும் ரவி மோகனின் திறமை என்னவென்று என நடிகர் கார்த்தி , ரவி மோகன் குறித்து நிகழ்ச்சி மேடையில் உருக்கமாக பேசியிருந்தார். இந்த தகவல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.