Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kamal Haasan: ரஜினியுடன் படம்.. மனம் திறந்த கமல்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Kamal Haasan And Rajinikanth Collaboration : தமிழ் சினிமாவில் இரு பெரும் தூண்களாக இருந்துவரும் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன். இவர்கள் இவரும் கோலிவுட் சினிமாவில் பிரிக்கமுடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்கள், இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கமல், ரஜினியுடன் இணைந்து படத்தை நடித்துத் தயாரிப்பது குறித்துப் பேசியுள்ளார்.

Kamal Haasan: ரஜினியுடன் படம்.. மனம் திறந்த கமல்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 08 Jun 2025 08:00 AM

நடிகர் கமல் ஹாசனின் (Kamal Haasan) முன்னணி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தை கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் கதையை நடிகர் கமல் ஹாசனும் இணைந்து எழுதியிருக்கிறார். இந்த படமானது 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கமல் ஹாசனுடன் நடிகர்கள் சிலம்பரசன் (Silambarasan), திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan), அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன், இரட்டை இயக்குநர்களான அன்பறிவ் (Anbariv) இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளார்.

மேலும் தக் லைஃப் திரைப்படமானது ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கமல் ஹாசன் , ரஜினியுடன் படத்தில் இணைவது குறித்தும், மேலும் ரஜினிகாந்த் அதைப் பற்றி பேசியது குறித்துக் கூறியிருக்கிறார் அதைப் பற்றி பார்க்கலாம்.

ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் பேச்சு :

சமீபத்தில் நேர்காணலில் நடிகர் ரஜினியுடன் இந்து படம் நடிப்பது பற்றி, தங்கள் இருவரும் பேசியது குறித்து கமல் ஹாசன் கூறியிருக்கிறார். அதில் நடிகர் கமல் ஹாசன், ரஜினியும் நானும் இணைந்து படத்தை உருவாக்க நினைத்திருந்தோம், அதற்காக நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, நான், “வெளி தயாரிப்பாளர்களை வைத்தும் நாம் இருவரும் நடிக்கும் படத்தைத் தயாரிக்கக்கூடாது. நீங்கள் படத்தைத் தயாரியுங்கள், இல்லையென்றால் நான் தயாரிப்பேன், அப்படியும் இல்லையென்றால் இருவரும் ஒன்றாக படத்தை தயாரிப்போம்” என கூறினேன்.

மேலும் நான் அவரிடம், கூறினேன், நானும் , மணிரத்னம் சாரும் இணைந்து தக் லைஃப் படத்தை உருவாக்கி ஒரு உதாரணத்தை காட்டியிருக்கிறோம். அதைப் போல எனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரஜினிகாந்த்தும் நிரூபிக்கவேண்டும் என்று தெரிவித்ததாக என நடிகர் கமல் ஹாசன் அதில் பேசியிருந்தார்.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட பதிவு :

மணிரத்னம், கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணியில் தக் லைஃப் படமானது மிகப் பிரம்மாண்டமான கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த படமானது . ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் திரைக்கதை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் ராஜ்கமல் நிறுவனத்தில் ரஜினி படம் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தலைவன் தலைவி படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?
தலைவன் தலைவி படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?...
பக்ரீத் - தன்னையே கடவுளுக்கு தருவதாக தற்கொலை செய்துக்கொண்ட நபர்!
பக்ரீத் - தன்னையே கடவுளுக்கு தருவதாக தற்கொலை செய்துக்கொண்ட நபர்!...
பயணிகளே..! சென்னை-கும்மிடிப்பூண்டி இடையிலான ரெயில்கள் ரத்து..!
பயணிகளே..! சென்னை-கும்மிடிப்பூண்டி இடையிலான ரெயில்கள் ரத்து..!...
சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. சிக்கிய இளைஞன்
சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. சிக்கிய இளைஞன்...
ஞாயிற்றுக்கிழமையில் இந்த விஷயத்தை தயவு செய்து செய்யாதீங்க!
ஞாயிற்றுக்கிழமையில் இந்த விஷயத்தை தயவு செய்து செய்யாதீங்க!...
தற்கொலையல்ல, கொலை... கொடுங்கையூர் நித்யா விவகாரம், நடந்தது என்ன?
தற்கொலையல்ல, கொலை... கொடுங்கையூர் நித்யா விவகாரம், நடந்தது என்ன?...
ரஜினியுடன் படம்.. மனம் திறந்த கமல்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ரஜினியுடன் படம்.. மனம் திறந்த கமல்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!...
பேரனின் திருமணத்திற்கு அழைக்காத விரக்தி - முதியவர் விபரீத முடிவு!
பேரனின் திருமணத்திற்கு அழைக்காத விரக்தி - முதியவர் விபரீத முடிவு!...
காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை...
காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை......
ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 6.1 ரிக்டர் பதிவு!
ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 6.1 ரிக்டர் பதிவு!...
அரசு பேருந்தில் டிக்கெட் கிடைக்க இதுதான் வழி.. போக்குவரத்து கழகம்
அரசு பேருந்தில் டிக்கெட் கிடைக்க இதுதான் வழி.. போக்குவரத்து கழகம்...