Kamal Haasan: எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள்.. தேசிய விருதை வென்ற திரிஷா தோஷரை வாழ்த்திய கமல்ஹாசன்!
Kamal Haasan Congratulates Trisha Thoshar: நடிகர் கமல்ஹாசன் தனது 6 வயதில் தேசிய விருதை வென்றிருந்தார். இந்நிலையில், இவரை பீட் செய்யும் விதத்தில் தனது 4வயதில் குழந்தை நட்சத்திரமான த்ரிஷா தோஷர் தேசிய விருதை வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் பதிவை வெளியிட்டுள்ளார்.

த்ரிஷா தோஷருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan). இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், இவரின் நடிப்பில் இறுதியாக “தக் லைஃப்” (Thug Life) என்ற படமானது வெளியானது. இந்த படத்தை மணிரத்னம் இயக்க, கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் (Silambarasan) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025 ஜூன் 5ம் தேதியில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் நடிகர் கமல்ஹாசன் நடிகராக மட்டுமில்லாமல், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் தனது 6 வயதில் தனது முதல் தேசிய விருதை (National Award) வென்றிருந்தார்.
இந்நிலையில், அவரின் சாதனையை முறியடித்து 4 வயதில் குழந்தை நட்சத்திரமான திரிஷா தோஷர் (Trisha Thoshar) என்பவர் தேசிய விருதை வென்றுள்ளார். இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில், நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : அருண் விஜய்யின் ரெட்ட தல எப்படி இருக்கு? முதல் விமர்சனம் கொடுத்த தனுஷ்!
திரிஷா தோஷர்க்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்
Dear Ms. Treesha Thoshar, my loudest applause goes to you. You’ve beaten my record, as I was already six when I got my first award! Way to go madam. Keep working on your incredible talent. My appreciation to your elders in the house.
— Kamal Haasan (@ikamalhaasan) September 25, 2025
அந்த பதிவில் நடிகர் கமல்ஹாசன், “அன்புள்ள திரிஷா தோஷர்க்கு, எனது மிக பெரிய பாராட்டுக்கள். எனது முதல் தேசிய விருது பெற்றபோது எனக்கு 6 வயது. நீங்கள் எனது சாதனையை முறியடித்துவிடீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள் மேடம். உங்களின் திறமையை மேன்படுத்த தொடர்ந்து பாடுபடுங்கள். உங்களின் வீட்டு பெரியவர்களுக்கும் நான் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் அந்த பதிவில் வெளிப்படையாக பேசியிருந்தார்.
இதையும் படிங்க : ஜிவி பிரகாஷ் குமார் – சைந்தவி விவாகரத்து வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு
தேசிய விருதை வென்ற குழந்தை நட்சத்திரம் த்ரிஷா தோஷர்
கடந்த 2023ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான படம்தான் நாள் 2. இந்த படத்தை இயக்குநர் சுதாகர் ரெட்டி யக்கந்தி இயக்கியிருந்தார். குடும்ப கதைக்களத்துடன் கூடிய இந்த படமானது, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தோல்வியை பெற்றிருந்தாலும். மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சிமி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நச்சத்திரம்தான் த்ரிஷா தோஷர். இவர் இந்த படத்தில் நடிக்கும்போது 2 வயது குழந்தை ஆவார். இவருக்கு 2023ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.