தியேட்டரில் மாஸ் காட்டிய தலைவர் தம்பி தலைமையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
Thalaivar Thambi Thalaimaiyil Movie OTT Update: தமிழ் சினிமாவில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் ஜீவா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில் . இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

தலைவர் தம்பி தலைமையில்
தமிழ் சினிமாவில் அதிக அளவில் ரோம் காம் படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ஜீவா. தொடர்ந்து இவரது படங்களில் என்ன இருக்கிறதோ இல்லையோ நிச்சயமாக காமெடி இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் தற்போதும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 15-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தப் படம் பொலிட்டிகள் சட்டையர் படமாக அமைத்து இருந்தது. இந்தப் படத்தை இயக்குநர் நித்திஸ் சகாதேவ் எழுதி இயக்கி இருந்தார். இவர் மலையாள சினிமாவில் நடிகர் பேசில் ஜோசஃப் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஃபலிமி என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த தலைவர் தம்பி தலைமையில் படத்தின் டீசர் வெளியான போதே படத்தின் மீது மக்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்களில் இந்த தலைவர் தம்பி தலைமையில் படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை திரையரங்குகளில் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இந்த தலைவர் தம்பி தலைமையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தற்போது அப்டேட் வெளியாகி உள்ளது.
பிப்ரவரி 12-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் தலைவர் தம்பி தலைமையில் படம்:
கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஜீவா அந்த கிராமத்தில் உள்ள மக்களின் ஓட்டிற்காக அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்கிறார். இப்படி இருக்கும் சூழலில் அந்த கிராமத்தில் திருமணம் நடைபெறும் பக்கத்து வீட்டில் ஒரு இறப்பு ஏற்படுகிறது. இரு வீட்டாரும் தங்களுக்கான சடங்குகளை செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் போது அவர்களை எப்படி சமாளித்து அந்த பிரச்னையை ஜீவா சரி செய்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வருகின்ற 12-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… சென்னையில் தொடங்கியது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் ஷூட்டிங்
நெட்ஃபிளிஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Kalyanathula aarambichu karumathi varaikum prachana izhuthu vitruche 😲🤕 pic.twitter.com/8UPBQLboBb
— Netflix India South (@Netflix_INSouth) February 10, 2026
Also Read… தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் படம் திட்டமிட்டபடி நடக்கும் – அருண் மாதேஸ்வரன்!