நடிகர் விஜய் சூப்பர் கூல் மனுஷன்… நடிகை மமிதா பைஜு புகழாராம்

Actress Mamitha Baiju talks about Vijay: நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உறுவாகியுள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதா பைஜு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை மமிதா பைஜு அளித்தப் பேட்டியில் நடிகர் விஜய் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய் சூப்பர் கூல் மனுஷன்... நடிகை மமிதா பைஜு புகழாராம்

நடிகர் விஜய், நடிகை மமிதா பைஜு

Published: 

19 Jun 2025 17:14 PM

மலையாள சினிமாவில் பிரேமலு படத்தில் நடித்தன் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை மமிதா பைஜு (Actress Mamitha Baiju). இவர் தற்போது தமிழில் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அதில் நடிகர் விஜயின் (Actor Vijay) நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் (Jana Nayagan Movie) படமும் ஒன்று. இந்த நிலையில் நடிகை மமிதா பைஜு மலையாளத்தில் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் விஜய் எப்படிப்பட்டவர் என்பது குறித்து நடிகை மமிதா பைஜு பேசியது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகை மமிதா பைஜுவிடம் நீங்கள் ஒரு விசயத்தை விஜயிடம் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் என்ன எடுத்துக்கொள்ளுவீர்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பிகிறார்.

விஜய் குறித்து மமிதா பைஜு சொன்ன விசயம்:

அதற்கு பதிலளித்து பேசிய நடிகை மமிதா பைஜு, ”விஜய் சார் மிகவும் பங்ச்சுவல் மற்றும் கூலான மனிதர். படப்பிடிப்புத் தளத்தில் என்ன நடந்தாலும் மிகவும் கூலாக அனைத்தையும் அனுகக் கூடியவர். அப்பறம் ஒரு முக்கியமான விசயம் என்ன என்றால், அவர் ஒரு நல்ல லிசனர். நான் விஜய் சாரிடம் கேப் விடாமா தொடர்ந்து பேசிட்டே இருப்பேன்.

அவர், மிகவும் பொருமையாக நான் பேசுவதை கவனித்துக்கொண்டே இருப்பார். நான் என்ன பேசினாலும் அமைதியாக கேட்பார். மிகவும் கூலான மனுசன் விஜய் சார் என்று நடிகை மமிதா பைஜு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் நடிகை மமிதா பைஜுவின் வீடியோ:

தமிழ் சினிமாவில் மமிதா பைஜு நடிப்பில் வரிசைக் கட்டும் படங்கள்:

பிரேமலு படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை மமிதா பைஜுவிற்கு கோலிவுட் சினிமாவில் பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றது. அந்த வகையில் நடிகை மமிதா பைஜு விஜயின் ஜன நாயகன் படத்திலும், சூர்யாவின் 64-வது படத்திலும், பிரதீப் ரங்கநாதன் உடன் டூட் படத்திலும், விஷ்ணு விஷால் உடன் இரண்டு வானம் ஆகிய படங்களிலும் வரிசையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.