செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது தெரியுமா?
7G Rainbow colony 2: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றிப்பெற்ற படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குநர் செல்வராகவன் தற்போத் எடுத்து வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வைரலாகி வருகின்றது.

7ஜி ரெயின்போ காலனி 2
இயக்குநர் செல்வராகன் (Selvaraghavan) இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே வெற்றிநடைப் போட்ட படம் 7 ஜி ரெயின்போ காலனி . இந்தப் படத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா நாயகனாக நடித்த நிலையில் நடிகை சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். இவரக்ளுடன் இணைந்து இந்தப் படத்தில் சுமன் ஷெட்டி, சுதா, விஜயன், சவிதா, மனோரமா என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர ராஜா இசையமைத்திரும்தார். படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நடுத்தர வர்க்க குடும்பத்தில் மூத்த மகனாக இருக்கும் நடிகர் ரவி கிருஷ்ணா குடும்பத்துடன் ஒரு காலனியில் வசித்து வருகின்றனர். அங்கு வட மாநிலத்தை சேர்ந்த சோனியா அகர்வாலின் குடும்பத்தினர் குடியேறுகின்றனர்.
நல்ல வசதியாக இருந்த சோனியாவின் குடும்பத்தினர் பண முடக்கம் காரணமாக அந்த காலனியில் வீடு எடுத்திருப்பார்கள். அங்கு உள்ளவர்களிடம் பழக கூட அவர்கள் யோசிப்பார்கள். இப்படி இருக்கையில் நாயகன் ரவிக்கு நடிகை சோனியா அகர்வாலை பார்த்த உடனே காதல் வந்துவிடும். அவரை தொரத்தி தொரத்தில் காதலிக்க தொடங்குவார்.
ஒரு கட்டத்தில் நடிகை சோனியா அகர்வாலும் ரவி கிருஷ்ணாவை காதலிக்க தொடங்கி விடுவார். இதனை அறிந்த சோனியாவின் குடும்பம் காலனியில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிடுவார்கள். அதன் பிறகு அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து சோனியாவை பார்க்க செல்வார் ரவி.
இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Here it is
7/G Rainbow colony 2 first look @thisisysr@AMRathnamOfl @ramji_ragebe1 pic.twitter.com/HB3CflZtsb— selvaraghavan (@selvaraghavan) January 1, 2025
இந்த நிலையில் ரவி கிருஷ்ணா சோனியா அகர்வாலுடன் வெளியூருக்கு சென்ற இடத்தில் ஒரு சாலை விபத்தில் நடிகை சோனியா அகர்வால் உயிரிழந்துவிடுகிறார். அதனை தொடர்ந்து பித்து பிடித்தவர் போல ரவி அழைகிறார். இத்துடன் படத்தின் முதல் பாகம் முடிந்துவிட்டது. 2004-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது.
இந்தப் படத்தில் ரவிகிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளரை மட்டும் இயக்குநர் செல்வராகவன் அறிவித்த நிலையில் நடிகை யார் வேறு யாரெல்லாம் இதில் நடிக்கிறார்கள் என்பது குறித்த அப்டேட் எதையும் அவர் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தை தீபாவளி அல்லது கிருஸ்துமஸ் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றது. மேலும் ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரம் அல்லது இறுதியில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.