தொடங்கியது அல்லு அர்ஜுன் – அட்லியின் பட ஷூட்டிங்? வைரலாகும் தகவல்

Allu Arjun : இயக்குநர் அட்லி குமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தொடங்கியது அல்லு அர்ஜுன் - அட்லியின் பட ஷூட்டிங்? வைரலாகும் தகவல்

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி

Published: 

14 Jun 2025 17:29 PM

 IST

நடிகர் அல்லு அர்ஜுன் (Actor Allu Arjun) தற்போது இயக்குநர் அட்லி (Director Atlee) இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி உடன் கூட்டணி வைப்பது குறித்து ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முனிட்டு வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது. மேலும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் கலாநிதிமாறன் சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மேலும் இந்தப் படத்தில் இன்னும் சில நாயகிகள் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் அடிப்படையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்லி – அல்லு அர்ஜுனின் கூட்டணி:

பான் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிசில் கலக்கும் இயக்குநர் அட்லி மற்றும் பான் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணி நிச்சயமாக ஒரு பெரிய ஹிட்டை கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் அல்லு அர்ஜுன் தனது 22-வது படத்திற்காக இயக்குநர் அட்லி குமார் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்காக இயக்குநர் அட்லி தன்னை நேரில் சந்தித்து கதை சொல்லும் போது எங்கள் இருவரின் எண்ணமும் ஒன்றாக இருப்பதை உணர்ந்தேன் என்றும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் தான் நடிக்கும் இந்தப் படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை தென்னிந்திய ரசிகர்கள் மட்டும் இன்றி பான் இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
வீக்கெண்டில் வீட்லேயே ஜாலியா ஒரு படம் பார்க்கனுமா? இந்த நெய்மர் படத்தை மிஸ் செய்யாமல் பாருங்க
Year Ender: 2025ல் ரூ 100 கோடிகள் வசூல் செய்த தமிழ் நடிகர்களின் படங்கள் என்னென்ன.. விவரமாக தெரிஞ்சிக்கோங்க!
2025-ம் ஆண்டில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களின் லிஸ்ட் இதோ
Sudha Kongara: சிவகார்த்திகேயன் அற்புதமான நடிகர்… பராசக்தி படத்திற்கு ஓகே சொன்னது இப்படித்தான்- சுதா கொங்கரா!
Suriya47: இந்தியாவில் முதல் முறை.. சூர்யா47ல் பயன்படுத்தப்படும் சிறப்பான தொழில்நுட்பம்? என்னனு தெரியுமா?
Sivakarthikeyan: பராசக்தி படம் வீரம், புரட்சி, காதலை பேசும்.. பொங்கலுக்கு நல்ல கொண்டாட்ட படமாக இருக்கும் – சிவகார்த்திகேயன் பேச்சு!
உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?