ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் மலையாள சினிமாவில் ஹிட் அடித்த பணி படத்தின் 2-ம் பாகம் எப்போது தொடங்குகிறது? அப்டேட் இதோ
Pani movie part 2 update: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார். இவர் எழுதி இயக்கி நாயகனாக நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் பணி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பணி
மலையாள சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக அறிமுகம் ஆகி பின்பு நாயகனாகவும் முக்கிய வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜோஜு ஜார்ஜ். இவர் சினிமாவில் தொடர்ந்து நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளர், பாடகராக வலம் வந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு முதல் இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். அதன்படி இவர் எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியான படம் பணி. இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த கேங்ஸ்டர் படமாக வெளியான இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் ஜோஜூ ஜார்ஜ் கதையின் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் அபிநயா, ஜுனைஸ் வி.பி. சீமா, சாகர் சூர்யா, சாந்தினி ஸ்ரீதரன், சுஜித் சங்கர், அலெக்சாண்டர் பிரசாந்த், பாபி குரியன், பிட்டோ டேவிஸ், ரஞ்சித் வேலாயுதன், அபய ஹிரண்மயி, ஜெயசங்கர் கரிமுட்டம், சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்ஷ்மி, அனூப் கிருஷ்ணன், மெர்லெட் ஆன் தாமஸ், ஜெயராஜ் வாரியர், ரினோஷ் ஜார்ஜ், பாபு நம்பூதிரி, அஷ்ரப் மல்லிசேரி மற்றும் ரமேஷ் கிரிஜா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்கள் விஷ்ணு விஜய், சாம் சி. எஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பணி படத்தின் 2-ம் பாகம் எப்போது தொடங்குகிறது?
கூலிக்காக கொலை செய்யும் இரண்டு இளைஞர்கள் கேரள மாநிலத்தில் உள்ள திரிசூரில் பெரிய கேங்ஸ்டராக இருக்கும் ஜோஜூ ஜார்ஜ் மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள அவர்களை ஜோஜூ ஜார்ஜ் பொது இடத்திலேயே அடித்துவிடுகிறார். இதனால் கடுப்பான அந்த இளைஞர்கள் ஜோஜூ ஜார்ஜை பழி வாங்குவதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். இதனை எப்படி ஜோஜூ ஜார்ஜ் சமாளித்தால் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் முதல் பாகம் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. அதன்படி வருகின்ற மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு இரண்டாம் பாகத்திற்கான் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read… சாமியாடியாக நடிகர் சிவகார்த்திகேயன்… வெளியானது சேயோன் படத்தின் வீடியோ!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Pani2 shooting is set to begin in March 2026 🔥 pic.twitter.com/iSj0Vf3tVq
— OTT Trackers (@OTT_Trackers) February 17, 2026
Also Read… இந்த வார இறுதியில் வெளியாகும் AK64 டைட்டில் மற்றும் அறிவிப்பு? வைரலாகும் தகவல்