2025-ம் ஆண்டில் இதுவரை நெட்ஃபிளிக்ஸில் வெளியான தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

What to Watch: 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தமிழ் சினிமாவில் படங்கள் வரிசைக்கட்டி வெளியாகி வருகின்றது. அதே போல புதுப் படங்களும் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இதுவரை இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து வெளியான தமிழ் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

2025-ம் ஆண்டில் இதுவரை நெட்ஃபிளிக்ஸில் வெளியான தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

படங்கள்

Published: 

07 Jul 2025 22:15 PM

காதலிக்க நேரமில்லை: இயக்குநர் கிருத்திகா உதயநிதி எழுதி இயக்கிய படம் காதலிக்க நேரமில்லை. நடிகர் ரவிமோகன் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவரக்ளுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, வினய், சுனில் வர்மா, டி.ஜே.பானு, அர்சாய், ஜான் கொக்கன், லால், மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி வைத்தியநாதன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டியைகை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

காதலிக்க நேரமில்லை படத்தின் ட்ரெய்லர்:

விடாமுயற்சி: இயக்குநர் மகிழ் திருமேனி எழுதி இயக்கிய படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் சார்ஜா, ரெஜினா கேசண்ட்ரா, ஆரவ், ரம்யா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்த நிலையில் இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகரக்ளிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றநிலையில் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர்:

ட்ராகன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கிய படம் ட்ராகன். இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் அனுபமா பரமேசுவரன், கயாடு லோஹர், மிஷ்கின், வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான், கே.எஸ்.ரவிக்குமார், ஜார்ஜ் மரியம், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ட்ராகன் படத்தின் ட்ரெய்லர்: