ரிலீஸ் தேதியை முடிவு செய்தது ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் படக்குழு
GV Prakash Kumar's Happy Raj Movie Release Update: நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஹேப்பி ராஜ். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

ஹேப்பி ராஜ்
தமிழ் சினிமாவில் 2006-ம் ஆண்டு முதல் இசையமைப்பாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் உருவாகும் படங்களுக்கும் இசையமைத்து வந்தார் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து இசையமைப்பாளராக இருக்கும் போதே அவ்வபோது படங்களில் கேமியோ வேடத்தில் நடித்து வந்த இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தில் இருந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் குமாரை உடனே எற்றுக்கொண்ட மக்கள் நாயகனாகவும் ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டையும் பிசியாக செய்து வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவது போல நடிப்பிலும் தொடர்ந்து வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து இறுதியாக வெளியான படம் லக்கி தி சூப்பர் ஸ்டார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அந்த வகையில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஹேப்பி ராஜ்.
ரிலீஸ் தேதியை முடிவு செய்தது ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ் படக்குழு:
இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் எழுதி இயக்கி உள்ள படம் ஹேப்பி ராஜ். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தனுஷ் 56 படம் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து
ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Yes March 27 we are aagayaaaa 🔥🔥🔥🔥 #HappyRaj cominggggg to theatres worldwide ….. ✨🎊✨🎉 pic.twitter.com/RFRZ0wcq7K
— G.V.Prakash Kumar (@gvprakash) March 5, 2026