Dhanush : தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஜி.வி. பிரகாஷ் குமார்.. வைரலாகும் பதிவு!
Dhanush Birthday : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவர் இன்று 2025, ஜூலை 28ம் தேதியில், இவர் தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் தனுஷ்
பான் இந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தெலுங்கு மொழியில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). இந்த படத்தை இயக்குநர் சேகர கம்முலா இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடித்தார் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படமானது தெலுங்கு மொழியை ஒப்பிடும்போது தமிழில் அந்தளவிற்கு வரவேற்கப்படவில்லை. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் தமிழில் இட்லி கடை படமானது ரிலீசிற்கு தயாராகிவருகிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போவில் வெளியான படங்களும் சரி, அந்த படத்தின் பாடல்களும் சரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து, தனுஷின் இயக்கத்திலும்,நடிப்பிலும் உருவாகியிருக்கும் இட்லி கடை (Idly Kadai) படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் “என்ன சுகம்” (Enna Sugam) சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று 2025, ஜூலை 28ம் தேதியில், நடிகர் தனுஷ் தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இவரின் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்து, ஜிவி. பிரகாஷ் குமார் வெளியிடப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை… நடிப்பு அசுரன் தனுஷிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த ஜிவி. பிரகாஷ் குமார் :
Happy bday my dear brother @dhanushkraja god bless u with good health and prosperity … waiting for #idlykadai ✨❤️🙌 https://t.co/hm7Wh0ZwW4 pic.twitter.com/dbQouKtM7n
— G.V.Prakash Kumar (@gvprakash) July 28, 2025
இந்த பதிவில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் , ” ஹேப்பி பர்த்டே மை டியர் பிரதர் தனுஷ். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன். மேலும் இட்லி கடை படத்திற்காக வெய்டிங் என அவர் அதில் எழுதியுள்ளார். இந்த பதிவு தற்போது தனுஷின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி!
தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் கம்போ ஹிட் படங்கள் :
நடிகர் தனுஷ் மாறும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் காம்போவில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. சமீபத்தில் தனுஷின் இயக்கத்திலும், ஜிவி பிரகாஷின் இசையமைப்பில் வெளியான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படமானது திரைப்பட ரீதியாக வரவேற்பைப் பெறாவிட்டாலும், பாடல்கள் மக்கள் மத்தியில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தினை அடுத்ததாக தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் இட்லி கடை படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார். மேலும் அசுரன், மாறன், பொல்லாதவன். மயக்கம் என்ன, ஆடுகளம் என தனுஷின் பல படங்களுக்கு இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பது குறிப்பிடத்தக்கது.