GV Prakash Kumar : பட்ஜெட் சிக்கல்… பிளாக்மைல் படத்தில் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த ஜி.வி. பிரகாஷ்!

GV Prakash Kumar Blackmail Movie : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்துவருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரின் முன்னணி நடிப்பில் பிளாக்மைல் திரைப்படமானது வரும் 2025 ஆகஸ்ட் 1ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பட்ஜெட் சிக்கல் காரணத்தால், ஜி.வி. பிரகாஷ் தனது சம்பளத்தில் பாதியைத்தான் பெற்றுள்ளார். இது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

GV Prakash Kumar : பட்ஜெட் சிக்கல்... பிளாக்மைல் படத்தில் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த ஜி.வி. பிரகாஷ்!

ஜி.வி. பிரகாஷ் பிளாக்மைல் திரைப்படம்

Published: 

20 Jul 2025 11:57 AM

நடிகர் ஜி.வி . பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) தமிழில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவரின் நடிப்பில் தமிழில் பல திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கிங்ஸ்டன் (Kingston). கடந்த 2025 மார்ச் மாதத்தில் வெளியான இப்படமானது இவருக்குத் தோல்வியைக் கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் பிளாக்மைல் (Blackmail). இந்த படமானது முற்றிலும் க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் மு. மாறன் இயக்கியுள்ளார். இந்த படத்தைத் தயாரிப்பாளர் தெய்வகனி அமல்ராஜ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த படத்தில் பட்ஜெட் பிரச்சனையின் காரணமாக, நடிகர் ஜிவி. பிரகாஷ் எப்போதும் மற்ற படங்களுக்கு பெரும் சம்பளத்தை விடவும் குறைவாகத்தான் வாங்கியுள்ளாராம். இது குறித்து தயாரிப்பாளர் தெய்வகனி அமல்ராஜ் நிகழ்ச்சி மேடையில் பேசியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : கவின் – பிரியங்கா மோகனின் படத்தின் கதை இதுவா? – வெளியான அப்டேட்!

ஜிவி பிரகாஷ் வெளியிட்ட பிளாக்மைல் பட ட்ரெய்லர் பதிவு :

பிளாக்மைல் திரைப்படம் ;

நடிகர் ஜிவி பிரகாஷ் குமாரின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிளாக்மைல். இந்த படத்தை இயக்குநர் மு. மாறன் இயக்கியுள்ளார். இந்த படமானது குழந்தைகள் கடத்தல் மற்றும் முற்றிலும் க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, தேஜு அஸ்வினி, ரெட்டின் கிங்ஸ்லி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : தனுஷின் ‘இட்லி கடை’ பட முதல் பாடல்.. அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!

இந்த படத்தைத் தயாரிப்பாளர் தெய்வகனி அமல்ராஜ் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி .எஸ். இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து பாடல்களும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டிருந்தார். தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் குமாரின் புதிய படம் :

இந்த திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் கிட்டதட்ட 3 திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இடிமுழக்கம் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், மீதி அடங்கதே, 13, மெண்டல் மனதில் மற்றும் இமார்டல் போன்ற திரைப்படங்களின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் இந்த இமார்டல் திரைப்படத்தில் , ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.