Gouri Kishan: நான் கேள்வியை புரிந்துகொள்ளவில்லையா? யூடியூபரின் மன்னிப்பை ஏற்கமுடியாது- கௌரி கிஷன்!

Gouri Kishan X Post: சினிமாவில் நடிகை மற்றும் முக்கிய வேடங்களில் நடித்துவருபவர் கௌரி கிஷன். சமீபகாலமாக இவரின் எடை தொடர்பான பிரச்சனைதான் இணையத்தில் வைரலாகிவந்தது. இந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்த யூடியூபர் மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்ட நிலையில், அந்த மன்னிப்பை ஏற்கமுடியாது என கௌரி கிஷன் பதில் பதிவை வெளியிட்டுள்ளார்.

Gouri Kishan: நான் கேள்வியை புரிந்துகொள்ளவில்லையா? யூடியூபரின் மன்னிப்பை ஏற்கமுடியாது- கௌரி கிஷன்!

கௌரி கிஷன் மற்றும் ஆர்.எஸ்.கார்த்திக்

Published: 

10 Nov 2025 20:06 PM

 IST

நடிகை கௌரி கிஷன் (Gouri G. Kishan) தமிழில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) போன்ற பிரபலங்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இவருக்கு மிகவும் பிரபலத்தை கொடுத்த திரைப்படம் என்றால் அது 96 திரைப்படம்தான். இயக்குநர் சி பிரேம் குமாரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிறுவயது ஜானு (திரிஷா) வேடத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்தாக இவருக்கு தமிழ், தெலுங்கு போன்ற மலிகளில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்திருந்தது. அதன்படி இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் ஆதர்ஸ் (Others). இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பிரபல யூடியூபர் ஆர்.எஸ். கார்த்திக் (YouTuber R.S. Karthik) என்பவர், கௌரி கிஷனிடம் எடை தொடர்பான கேள்வியை கேட்டிருந்தார்.

இந்த விஷயமானது ஒட்டுமொத்த திரையுலகம் முழுவதும் பேசும்பொருளானது. இதன் காரணமாக பலரும் யூடியூபர் கார்த்திக்கு கன்னடம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அனைவரும் கன்னடம் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவிற்கு பதிலுக்கும் விதத்தில், நடிகை கௌரி கிஷன் எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கண்ணு முழி பாடல் உண்மையில் அந்த படத்திற்காக பண்ணது- உண்மையை உடைத்த வெற்றிமாறன்!

யூடியூபர் மன்னிப்பு கேட்டதற்கு பதிலளித கௌரி கிஷன் எக்ஸ் பதிவு :

அந்த பதிவில் நடிகை கௌரி கிஷன், “ஒரு பொறுப்புணர்வு இல்லாமல் மன்னிப்பு கேட்பது, அது மன்னிப்பு அல்ல என கூறியிருந்தார். மேலும் ஆர்.எஸ். கார்த்தி அந்த வீடியோவில், “அவள் கேள்வியைத் தவறாகப் புரிந்து கொண்டாள், அது ஒரு வேடிக்கையான கேள்வி மற்றும் நான் யாரையும் உடல் ரீதியாக அவமானப்படுத்தவில்லை” என அவர் வீடியோவில் கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் கௌரி கிஷன்,”தெளிவாகச் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க : ஓடிடியை தெரிவிக்கவிட காத்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் டியூட்… எந்த ஓடிடியில்.. எப்போது பார்க்கலாம்?

நான் நடிப்பு சார்ந்த வருத்தத்தையோ அல்லது வெற்று வார்த்தைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டேன். சிறப்பாகச் செய்யுங்கள் ஆர்.எஸ். கார்த்திக் என அந்த பதிவில் அவர் விவரமாக தெரிவித்துள்ளார். மொத்தத்தில் நடிகை கௌரி கிஷன் யூடியூபரின் மன்னிப்பை ஏற்கமாட்டேன்” என தெளிவாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்கள் :

இந்த சம்பவமானது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற சினிமா துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை தொடர்ந்து நடிகை குஷ்பூ மற்றும் பாடகி சின்மயி ஸ்ரீபதா போன்ற பிரபலங்களும் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் எக்ஸ் பக்கத்தில் தங்களின் பதிவை வெளியிட்டிருந்தனர்.

Related Stories
காமெடி வெப் சீரிஸ் பார்க்கனுமா? அப்போ ஹார்ஸ்டார் ஓடிடியில் உள்ள இந்த சட்னி சாப்பாரை மிஸ் செய்யாதீர்கள்
தனது வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும்? விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதை உறுதி செய்த ராஷ்மிகா மந்தனா!
திரையரங்குகளில் 75 நாட்களைக் கடந்தது லோகா சாப்டர் 1… படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு!
Nelson Dilipkumar: வெற்றிமாறன் தயாரித்ததிலே மிகவும் வித்தியாசமான படம்… மாஸ்க் படத்திற்கு விமர்சனம் கொடுத்த நெல்சன் திலீப்குமார்!
திரையரங்குகளில் வெளியாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படம்
Dude Movie: வெற்றிகரமாக திரையரங்குகளில் 25 நாட்களை கடந்த டியூட்.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!