மெட்ராஸ் மேட்னி, தக் லைஃப்… இந்த வார ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ!

What To Watch: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதுப் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதே மாதிரி தற்போது ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் தமிழ் படங்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரம் ஓடிடியில் என்னப் படங்கள் வெளியாகி உள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மெட்ராஸ் மேட்னி, தக் லைஃப்... இந்த வார ஓடிடியில் என்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ!

படங்கள்

Published: 

03 Jul 2025 18:43 PM

மெட்ராஸ் மேட்னி: இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற படம் மெட்ராஸ் மேட்னி. இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் உடன் இணைந்து நடிகர்கள் ஷெல்லி, ரோஷ்னி ஹரிப்ரியன், சத்யராஜ், விஷ்வா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து உள்ளது. மிடில் கிளாஸ் ஃபேமிலியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது டெண்ட் கொட்டா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மெட்ராஸ் மேட்னி படத்தின் ட்ரெய்லர்:

பரமசிவன் பாத்திமா: நடிகர் விமல் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான படம் ரமசிவன் பாத்திமா. இந்தப் படத்தை இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடிகை சாயா தேவி நடித்து இருந்தார். மேலும் படம் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது ஆஹா தமிழ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

பரமசிவன் பாத்திமா படத்தின் ட்ரெய்லர்:

ராஜபுத்திரன்: நடிகர் பிரபு மற்றும் வெற்றி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ராஜபுத்திரன். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கிருஷ்ண பிரியா, ஆர்.வி. உதயகுமார், மன்சூர் அலிகான், இம்மான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, கோமல் குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மகா கந்தன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். படம் கடந்த மே மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது சிம்ளி சவுத் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ராஜபுத்திரன் படத்தின் ட்ரெய்லர்:

தக் லைஃப்: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் நாயகனாக நடித்தப் படம் தக் லைஃப். இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு பான் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர்: