உனக்கும் எனக்கும் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!

மோகன்ராஜா இயக்கத்தில் ரவி மோகன், திரிஷா, பிரபு, பாக்யராஜ், சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் உனக்கும் எனக்கும். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் ஜூலை 28, 2005 அன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

உனக்கும் எனக்கும் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!

சினிமா செய்திகள்

Updated On: 

28 Jul 2025 20:04 PM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், பல்துறை திறமை வாய்ந்தவராகவும் திகழும் நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடைய தனுஷ் நடித்து வரும் இட்லி கடை படத்தின் அப்டேட் நேற்று வெளியானது. இன்று அவரின் நடிப்பில் உருவாகி வரும் படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பானது ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்காக நடிகர் சிம்பு சுமார் 10 கிலோ எடை குறைந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் தொடர்பு கதையாக இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி மற்றும் வடிவேலு பகத் பாஸில் நடித்த மாரீசன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் வார விடுமுறையில் நல்ல வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் வியக்க வைக்கும் கதாநாயகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் நடித்துள்ள காந்தா படத்தின் டீசர் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Jul 2025 07:45 PM (IST)

    அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ – வெளியான அப்டேட்!

    அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் இசை வெளியீட்டு உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  மான் கராத்தே உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ் திருக்குமரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு சித்தி இத்னானி நடித்துள்ளார். சாம் சிஎஸ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

  • 28 Jul 2025 07:28 PM (IST)

    கூலி பட டிரெய்லர் எப்போது தெரியுமா?

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 2, 2025 அன்று வெளியாகவுள்ளது. அன்றைய தினம் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • 28 Jul 2025 07:20 PM (IST)

    துல்கர் சல்மானின் காந்தா டீசரை பாராட்டிய சூர்யா

    துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசர் ஜூலை 28, 2025 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராணா தயாரித்துள்ள இந்தப் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டீசரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா, இப்போது தான் இந்த டீசரை பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

  • 28 Jul 2025 07:07 PM (IST)

    கூலி படத்தின் முன் பதிவில் மிகப்பெரிய சாதனை

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் முன் பதிவில் மிகப்பெரிய சாதனை படைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகளுக்கான வசூல் 50,000 டாலர் வசூலித்திருக்கிறதாம். இது ரசிகர்களிடையே படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை காட்டுகிறது.

  • 28 Jul 2025 06:48 PM (IST)

    ரெட்ரோ பட பின்னணி இசையை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே 1, 2025 அன்று வெளியான ரெட்ரோ திரைப்படம்  கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் பின்னணி இசையை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

  • 28 Jul 2025 06:34 PM (IST)

    சரத்குமார் – சித்தார்த்தின் 3BHK – வெற்றிகரமான 25வது நாள்!

    ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த் இணைந்து நடித்திருந்த 3BHK திரைப்படம் கடந்த ஜூலை 4, 2025 அன்று வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • 28 Jul 2025 06:16 PM (IST)

    தனுஷின் இட்லி கடை – ரிலீஸ் தேதியுடன் வெளியான போஸ்டர்!

    நடிகர் தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் இட்லி கடை. இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, அருண் விஜய் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்த நிலைில் இந்தப் படம் அக்டோபர் 1, 2025 அன்று வெளியாகவுள்ளதை உறுதி செய்துள்ளது.

  • 28 Jul 2025 06:06 PM (IST)

    19வது வருடத்தில் உனக்கும் எனக்கும் – பிரபுதேவாவை சந்தித்த மோகன் ராஜா

    மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, திரிஷா, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் உனக்கும் எனக்கும். இந்தப் படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கில் பிரபு தேவா இயக்கி நுவொஸ்துனன்டே நேனொடன்டன்னா என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உனக்கும் எனக்கும் படத்தின் 19வது ஆண்டில் பிரபு தேவாவை கோவாவில் சந்தித்தாக இயக்குநர் மோகன்ராஜா பகிர்ந்துள்ளார்.

    பிரபு தேவாவுடனான சந்திப்பு குறித்து மோகன்ராஜா

     

     

  • 28 Jul 2025 05:46 PM (IST)

    சிவகார்த்திகேயனின் மதராஸி பாடல் புரமோ – வெளியான அறிவிப்பு!

    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடல் புரமோ ஜூலை 29, 2025 மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

    Read More… 

  • 28 Jul 2025 05:31 PM (IST)

    ‘அய்யா’ படத்துக்கு சீமான் வாழ்த்து!

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்று படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சேரன் இயக்கும் இந்தப் படத்தில் ராமதாஸ் வேடத்தில் ஆரி நடிக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் காவியம் தமிழ் மக்கள் அனைவரும் போற்றிக்கொண்டாடக்கூடிய மிகச்சிறந்த படைப்பாக வரும் என பெரும் நம்பிக்கையோடு நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • 28 Jul 2025 05:22 PM (IST)

    சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ புரமோ அப்டேட்!

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் புரமோ ஜூலை 28, 2025 அன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடித்துள்ளார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்

  • 28 Jul 2025 04:59 PM (IST)

    வெளியானது கிங்டம் படத்தின் ரன் டைம்!

    கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள கிங்டம் திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

  • 28 Jul 2025 04:54 PM (IST)

    மாரீசன் வசூல் எவ்வளவு தெரியுமா?

    ஃபகத் பாசில் வடிவேலு இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படம் கடந்த 3 நாட்களில் தமிழகம் முழுவதும் 6 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சுதீர் சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

  • 28 Jul 2025 04:35 PM (IST)

    சென்னையில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி – தேதி அறிவிப்பு

    சென்னையில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 22, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த நிகழ்ச்சி சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    இசை நிகழ்ச்சி குறித்து அனிருத் அறிவிப்பு

  • 28 Jul 2025 04:18 PM (IST)

    இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஹீரோவாகும் சாண்டி மாஸ்டர்!

    இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் , பா.ரஞ்சித் தயாரிக்கும் படத்தில், வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நான் தெரியமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • 28 Jul 2025 04:04 PM (IST)

    கார்த்திக் சுப்புராஜுடன் சேர்ந்து படம் தயாரிக்கிறேன் – லோகேஷ் கனகராஜ்!

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து படம் தயாரிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை ரத்ன குமார் இயக்கவிருப்பதாகவும் சமீபத்தில் அவர் பேட்டியில் அறிவித்துள்ளார். இதற்காகத்தான் ரத்ன குமாரை கூலி படத்தில் பயன்படுத்த வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • 28 Jul 2025 03:50 PM (IST)

    தான் படித்த கல்லூரியில் கூலி பட புரமோஷனை துவங்கிய லோகேஷ் கனகராஜ்

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் படித்த கோயம்புத்தூர் கல்லூரியில் இருந்து தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், எங்கே தொடங்கியதோ அதே இடத்திற்கே வந்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த போட்டோ

     

  • 28 Jul 2025 03:32 PM (IST)

    வட சென்னை ரீ-ரிலீஸ் – ரசிகர்களுடன் படம் பார்த்த வெற்றிமாறன்.

    நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த வட சென்னை திரைப்படம் ஜூலை 28, 2025 அன்று ரீரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் வெற்றி மாறன் சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார். அவரிடம் ரசிகர்கள் வட சென்னை 2 அப்டேட் கேட்டபடி இருந்தனர்.

  • 28 Jul 2025 03:30 PM (IST)

    திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கொலை.. குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்

    திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்துக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சகோதரியை காதலித்ததால் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

  • 28 Jul 2025 03:17 PM (IST)

    வெளியான துல்கர் சல்மானின் காந்தா டீசர்!

    துல்கர் சல்மானின் காந்தா படத்தின் டீசர் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 28, 2025  அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, ராணா டகுபதி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    Read More… 

  • 28 Jul 2025 03:01 PM (IST)

    ரவி மோகனின் உனக்கும் எனக்கும் – 19 ஆண்டுகள் நிறைவு

    மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், திரிஷா, பிரபு, பாக்யராஜ், சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் உனக்கும் எனக்கும். இந்தப் படம் ஜூலை 28, 2025  அன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

  • 28 Jul 2025 02:46 PM (IST)

    பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்த நடிகர் தனுஷ்

    நடிகர் தனுஷ் ஜூலை 28, 2025 அன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்ளை சேர்ந்த அவரது ரசிகர்களை நேரில் வரவழைத்து விருந்து வைத்திருக்கிறார். பின்னர் அவர் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

  • 28 Jul 2025 02:32 PM (IST)

    ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய 11 பேரின் லிஸ்ட்டை வெளியிட்ட திவ்யா

    தமிழில் ரம்யா என்ற பெயரில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் திவ்யா. இவர் தனக்கு நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாக கூறி 11 பேரின் லிஸ்ட்டை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

  • 28 Jul 2025 02:16 PM (IST)

    நான் பணியாற்றியதிலேயே சிறந்த இயக்குநர் – தனுஷிற்கு அருண் விஜய் வாழ்த்து!

    தனுஷ் இயக்க நடித்துள்ள இட்லி கடை படத்தில் நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அருண் விஜய், தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், நான் பணியாற்றியதிலேயே சிறந்த நடிகர் மற்றும் இயக்குநர் தனுஷிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்கள் செய்யும் அனைத்திலும் சிறந்த உயரத்தை அடைய என் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

    தனுஷிற்கு அருண் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

     

  • 28 Jul 2025 02:00 PM (IST)

    ரூ.25 கோடி வசுலித்த தலைவன் தலைவி படம்.. வெளியான அறிவிப்பு

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்  பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் தலைவன் தலைவி. இப்படம் ரிலீசான 3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • 28 Jul 2025 01:40 PM (IST)

    ஹவுஸ்மேட்ஸ் படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது: இயக்குநர் ராஜவேல்

    இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ஹவுஸ்மேட்ஸ். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் பேசிய ராஜவேல், முதல் படம் எடுப்பது எப்போதும் கஷ்டம். அதைவிட சவாலானது வெளியிடுவது. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

  • 28 Jul 2025 01:18 PM (IST)

    காப்புரிமை வழக்கு.. இசையமைப்பாளர் இளையராஜா மனு தள்ளுபடி

    சோனி நிறுவனத்தின் வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காப்புரிமை தொடர்பாக இந்த வழக்கு போடப்பட்டிருந்தது.

  • 28 Jul 2025 12:45 PM (IST)

    இந்த வாரம் வெளியாகும் இளம் நடிகர்களின் படங்கள்

    தமிழ் சினிமாவில் 2025, ஆகஸ்ட் 1ஆம் தேதி ஹவுஸ்மேட்ஸ், சரண்டர், போகி என வளரும் இளம் நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கு பெரிய அளவில் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்ற நிலையில் எந்த படம் மக்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 28 Jul 2025 12:20 PM (IST)

    வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெறும் கூலி டிக்கெட் முன்பதிவு

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு டிக்கெட் விற்பனை வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 28 Jul 2025 12:00 PM (IST)

    ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற லோஹா படத்தின் டீசர்

    துல்கர் சல்மான் தயாரிப்பில் நஸ்லன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லோஹா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் விரைவில் தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 28 Jul 2025 11:41 AM (IST)

    காந்தா படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

    துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் காந்தா படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் ராணா டகுபதி தயாரித்து வரும் நிலையில் செல்வணி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

  • 28 Jul 2025 11:20 AM (IST)

    வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன்.. ப்ரோமோ ஷூட் பணிகள் நிறைவு

    வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் படத்திற்கான ப்ரோமோ ஷூட் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இதில் அதிகமான விஎஃப்எக்ஸ் பணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

  • 28 Jul 2025 11:00 AM (IST)

    நடனமாட பயந்த சௌபின் சாஹிர்.. சாண்டி சொன்ன சுவாரஸ்ய தகவல்

    ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் இடம்பெற்றுள்ள மோனிகா பாடலில் நடனமாட பிரபல மலையாள நடிகரான சௌபின் சாஹிர் பயந்ததாக நடன இயக்குநர் சாண்டி தெரிவித்துள்ளார். நான் இதுவரை இல்லாமல் முதல்முறையாக இவ்வளவு பெரிய குரூப்புடன் நடனமாடுகிறேன் என கூறியதாகவும் சாண்டி பகிர்ந்துள்ளார்.

  • 28 Jul 2025 10:40 AM (IST)

    கமலுடன் சினிமா பற்றி எதுவும் பேசமாட்டேன்.. நடிகர் ஃபஹத் ஃபாசில்

    நானும் கமல்ஹாசனும் சேர்த்தால் கிட்டதட்ட 3 மணி நேரம் நகைச்சுவையாக ஏதாவது பேசுவோம். அதில் சினிமா பற்றி எதுவும் இருக்காது. கிட்டதட்ட எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றி தான் பேச்சு இருக்கும் என நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.

  • 28 Jul 2025 10:20 AM (IST)

    பிரபல கன்னட நடிகர் பிரதமிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி கொலை மிரட்டல்

    கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக திகழும் பிரதமிடம், நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் என கூறி ஆயுதங்களை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

  • 28 Jul 2025 10:00 AM (IST)

    விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸ்.. படக்குழு திருப்பதியில் சாமி தரிசனம்

    கௌதம் தின்னூரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கிங்டம். இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். அப்போது அங்கு வருகை தந்த பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

  • 28 Jul 2025 09:40 AM (IST)

    துல்கர் சல்மான் பிறந்தநாள்.. காந்தா படத்தின் டீசர் இன்று வெளியீடு

    நடிகர் மம்மூட்டியின் மகனும், தென்னிந்தியாவின் இளம் நடிகருமான துல்கர் சல்மான், இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் காந்தா படத்தின் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 28 Jul 2025 09:20 AM (IST)

    ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பிய 11 பேர்.. நடிகை திவ்யா ஸ்பந்தனா வெளியிட்ட பதிவு

    நடிகையும் , பிரபல அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா தனக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பிய 11 பேரின் பெயரை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார். அவரின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இவர்கள் கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் என சொல்லப்படுகிறது.

  • 28 Jul 2025 09:00 AM (IST)

    மதராஸி படம் கண்டிப்பாக கம்பேக்காக அமையும்: ஏ.ஆர்.முருகதாஸ்

    தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய்,அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வெற்றி கண்டவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றி கிடைக்காமல் தவித்து வருகிறார். இப்படியான நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்கியுள்ள மதராஸி படம் கண்டிப்பாக கம்பேக்காக அமையும் என ஏ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • 28 Jul 2025 08:40 AM (IST)

    நல்ல வரவேற்பை பெற்ற சட்டமும் நீதியும்.. நெகிழ்ச்சியடைந்த சரவணன்

    ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 18ம் தேதி வெளியான வெப் தொடர் சட்டமும் நீதியும். பாலாஜி செல்வராஜ் இயக்கிய இந்த வெப் தொடரில் முதன்மை கேரக்டரில் சரவணன் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் சட்டமும் நீதியும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் சரவணன் நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார்.

  • 28 Jul 2025 08:20 AM (IST)

    சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஜய் சேதுபதி.. ஷாக்கான ரசிகர்கள்

    பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் சென்னை கமலா தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தனர்.

  • 28 Jul 2025 08:02 AM (IST)

    HBD Dhanush: நடிகர் தனுஷ் பிறந்தநாள்.. களைகட்டிய சமூக வலைத்தளங்கள்

    தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் வாழ்த்து மழையால் களைகட்ட தொடங்கியுள்ளது.