Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கருடன் பணியாற்றியது மோசமாக இருந்தது – பிரபலம் கொடுத்த ஷாக் தகவல்!

Game Changer Movie 7.5 Hours Cut To 3 : கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் பட இயக்குநர் என்றாலே நமக்கு நினைவிற்கு வருபவர் சங்கர். இவர் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமான படம் கேம் சேஞ்சர். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் அமைந்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய எடிட்டர் ஷமீர் படத்தின் மொத்த டைமிங் குறித்தது ஷாக் பதில் கொடுத்துள்ளார்.

கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கருடன் பணியாற்றியது மோசமாக இருந்தது  – பிரபலம் கொடுத்த ஷாக் தகவல்!
கேம் சேஞ்சர்
barath-murugan
Barath Murugan | Published: 24 May 2025 16:09 PM

நடிகர் ராம் சரணின் (Ram Charan)  முன்னணி நடிப்பில் இறுதியாக மிகப் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர் (Game Changer). இந்த படத்தை இயக்குநர் எஸ். ஷங்கர் (S Shankar) இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராக பணியாற்றி வருபவர் ஷங்கர். இவரின் தெலுங்கு (Tollwood) திரையுலகில் முதல் படமாக அமைந்ததுதான் கேம் சேஞ்சர். இந்த படத்தின் மூல கதையை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கொடுத்துள்ளார். பின் அந்த கதையை இயக்குநர் ஷங்கர் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிப் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்பா மற்றும் மகன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி (Kiara Advani) மற்றும் அஞ்சலி இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உலகமெங்கும் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகியது. இந்த படமானது மொத்தமாக சுமார் 3 மணிநேர படமாக அமைந்திருந்தது. ஆனால் இந்த படமானது மொத்தம் சுமார் 7.5 மணிநேரமாக இருந்ததாகவும், அதை 3 மணிநேரமாக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுவந்ததாகவும் , கேம் சேஞ்சர் பட எடிட்டர் ஷமீர் கூறியுள்ளார்.  அந்த தகவலானது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

கேம் சேஞ்சர் எடிட்டர் ஷமீர் ஷமீர் கூறிய விஷயம் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றி பேசிய, கேம் சேஞ்சர் பட எடிட்டர் ஷமீர். அதில் “சங்கர் சாருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்த கேம் சேஞ்சர் படத்தினை எடிட் செய்யும்போது நிறையச் சவாலான விஷயங்கள் இருந்தது. இந்த படத்தின் நீளம் சுமார் 7.5 மணி நேரமாகும். அவ்வளவு பெரிய படத்தை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் 3 மணி நேரமாகக் குறைத்தோம்.

சுமார் 7.5 மணிநேரம் இருந்த இந்தப் படத்தை சுமார் 4.5 மணிநேரத்தை வெட்டி, மொத்தமாக 3 மணிநேரமாகக் கொண்டுவந்தோம். இந்த படத்தில் எடிட்டராக பணியாற்றிய விஷயமானது மிகவும் மோசமாகத்தான் இருந்தது என்று பிரபல எடிட்டர் ஷ்மீர் கூறியுள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எடிட்டர் ஷமீர் பேசிய வீடியோ :

ராம் சரணின் இந்த கேம் சேஞ்சர் திரைப்படமானது சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்களுக்கு மட்டும் ரூ. 75 கோடிகள் செலவானதாக ஷங்கர் தெரிவித்திருந்தார். இவ்வாறு பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படமானது. சுமார் ரூ. 180 கோடிகளுக்கு மேல் மட்டும்தான் வசூல் செய்திருந்தது. இதன் காரணமாக ராம் சரணின் நடிப்பில் வெளியான இந்தப் படம் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்!
ராகுல் காந்தி மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்!...
ஆர்பிஐயின் விதியால் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் - விஜய் கண்டனம்!
ஆர்பிஐயின் விதியால் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் - விஜய் கண்டனம்!...
Thug Life என டைப் செய்தால் கூகுளில் வரும் மேஜிக் - வைரல் வீடியோ
Thug Life என டைப் செய்தால் கூகுளில் வரும் மேஜிக் - வைரல் வீடியோ...
உடல் குளிர்ச்சியைத் தரும் காய்கறிகள்.. நீரிழிப்பை தடுக்கும்!
உடல் குளிர்ச்சியைத் தரும் காய்கறிகள்.. நீரிழிப்பை தடுக்கும்!...
தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!
தலைவா படத்தில் சந்தானம் பண்ண விஷயத்தை மறக்க முடியாது- விஜய்!...
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்
இந்தியாவில் எக்ஸ் தளம் முடங்கியது - பயனர்கள் கோபம்...
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!
பதவி நீக்கத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன்.. அன்புமணி புலம்பல்!...
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?
டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு - என்ன காரணம் தெரியுமா?...
சொத்து வரி: அதிமுக இரட்டை வேடங்களில் அரசியல் நாடகம் - கே.என் நேரு
சொத்து வரி: அதிமுக இரட்டை வேடங்களில் அரசியல் நாடகம் - கே.என் நேரு...
'ஏஸ்' திரைப்படம் வந்ததே பலருக்கு தெரியல - விஜய் சேதுபதி
'ஏஸ்' திரைப்படம் வந்ததே பலருக்கு தெரியல - விஜய் சேதுபதி...
புஜாரா, ரஹானே சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை முடிந்ததா..?
புஜாரா, ரஹானே சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை முடிந்ததா..?...