Kaantha: நடிப்பு சக்கரவர்த்தியின் காந்தா படத்தை ஓடிடியில் பார்க்க ரெடியா? ரிலீஸ் எப்போது தெரியுமா?

Kaantha OTT Release Date: துல்கர் சல்மானின் வித்தியாசமான நடிப்பில் இறுதியாக வெளியான படம் காந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பையே பெற்றிருந்தது. இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியாகியுள்ளது.

Kaantha: நடிப்பு சக்கரவர்த்தியின் காந்தா படத்தை ஓடிடியில் பார்க்க ரெடியா? ரிலீஸ் எப்போது தெரியுமா?

காந்தா திரைப்படம்

Published: 

08 Dec 2025 17:39 PM

 IST

தென்னிந்தியாவில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இறுதியாக வெளியான படம் காந்தா (Kaantha). இந்த திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாகவும், படத்தின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில் துல்கருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashree Borse) நடித்திருந்தார். இவருக்கு இதுதான் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த 1960ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடந்த உண்மையான கதைகளை மற்றும் கற்பனை கதையையும் இணைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இதில் நடிகர் ராணா (Rana), சமுத்திரக்கனி போன்ற பிரபலங்களும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த 2025 நவம்பர் 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இப்படமானது வெளியாகி 4 வாரத்தை கடந்துள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10 நாட்களில் தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

காந்தா திரைப்படம் எந்த ஓடிடியில் எப்போது வெளியாகிறது :

இந்த காந்தா படமானது அப்படியே ரெட்ரோ காலத்து திரைப்படம் போன்றே வெளியாகியிருந்தது. இது இயக்குநர் மற்றும் நடிகருக்கும் இடையே இருக்கும் ஈகோ பிரச்சனையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் கதையும் மக்களிடையே வரவேற்கப்பட்டிருந்தது. பொதுவாக திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 4 முதல் 6 வாரத்திற்குள் ஓடிடியில் வெளியாகிவிடும்.

இதையும் படிங்க : திலீப் தலையில் இடியை இறக்கிய கேரள நடிகைகள்.. விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!

அதுபோல் இந்த காந்தா படமும் வரும் 2025 டிசம்பர் 12ம் தேதியில் ஓடிடியில் வெளியாகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், வரும் 2025 டிசம்பர் 12ம் தேதியில் ஓடிடியில் இப்படத்தை வெளியிட அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தா திரைப்படத்தின் ஓடிடி ரில்சி குறித்து வெளியான எக்ஸ் பதிவு :

இந்த காந்தா படமானது தமிழ் மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் இந்த படம் சுமார் ரூ 65 கோடிகளுக்கு மேல் தயாரான நிலையில், மொத்தம் எவ்வ்ளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இப்படம் மொத்தமாக சுமார் ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளாராம். இந்த படம் வசூல் ரீதியாக பின்னுக்கு சென்றாலும், நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை