பிக்பாஸில் பார்வதியின் முகத்திரையை கிழித்த திவ்யா… வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடைபெறும் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது தொடர்ந்து மூன்று புரோமோ வீடியோக்களிலும் கம்ருதின் மற்றும் பார்வதி இடையே உள்ள சண்டை குறித்து வெளியாகி உள்ளது.

பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் ஒன்று தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் இடையே காதல் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதன்படி அவர்கள் பிக்பாஸில் 100 நாட்கள் முடிந்தபிறகு வெளியே சென்றதும் அவர்களின் காதல் நீடித்ததா என்று கேட்டாள் அது கேள்வி குறியே. பிக்பாஸ் காதல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் முடியும் என்பது உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கும், வெளியே உள்ள பார்வையாளர்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு விசயமாக உள்ளது. இந்த நிலையில் இந்த 9-வது சீசன் தொடங்கியதில் இருந்து பல காதல் கதைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் முளைத்தது. ஆனால் அதில் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்டது பார்வதி மற்றும் கம்ருதின் காதல் கதைதான் அதிகமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்களின் காதல் காட்சிகளைவிட சில்மிஷ காட்சிகளே அதிகமாக இருந்தது என்று ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற உள்ளது. இதில் பார்வதியின் வீட்டார் வரும் போது அவரின் செயல் கேள்வி எழுப்படும் என்று பயந்து கொண்டு இருக்கும் பார்வதி முன்பு கம்ருதின் குறித்து தவறாக பேசியது காரணமாக கம்ருதின் மற்றும் பார்வதி இடையே சண்டை ஏற்படும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வரைலாகி வருகின்றது.
பிக்பாஸில் பார்வதியின் முகத்திரையை கிழித்த திவ்யா:
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் பார்வதி என்ன காரணத்திற்காக கம்ருதின் மீது பழி போடுகிறார் என்றும் பார்வதிக்கு தேவை என்றால் அவர் என்ன வேண்டும் என்றாலும் செய்வார் என்றும் தெளிவாக திவ்யா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Arasan: அரசனின் எழுச்சி.. அரசன் புரோமோவின் BTS வீடியோவை வெளியிட்ட சிலம்பரசன்!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day78 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/9Yltre71id
— Vijay Television (@vijaytelevision) December 22, 2025
Also Read… 8 ஆண்டுகளைக் கடந்தது நானி – சாய் பல்லவி நடிப்பில் வெளியான மிடில் கிளாஸ் அப்பாயி படம்