Sudha Kongara: பராசக்தியை தேர்தல் ஆண்டில் வெளியிடவேண்டும் என திட்டமிடவில்லை – சுதா கொங்கரா பேச்சு!

Sudha Kongara About Parasakthi Relese Planing: இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் வெளியாகவுள்ள படம்தான் பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுதா கொங்கரா, பராசக்தி பட ரிலீஸ் காரணம் குறித்து பேசியுள்ளார்.

Sudha Kongara: பராசக்தியை தேர்தல் ஆண்டில் வெளியிடவேண்டும் என திட்டமிடவில்லை - சுதா கொங்கரா பேச்சு!

சுதா கொங்கரா

Published: 

30 Dec 2025 21:14 PM

 IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் சுதா கொங்கரா (Sudha Kongara). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் குறைவான திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும். ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் முடித்திருந்தது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான படம்தான் சூரரைப்போற்று (Soorarai Pottru). நடிகர் சூர்யா (Suriya) மற்றும் அபர்ணா பாலமுரளி இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது சூர்யாவிற்கு தேசிய விருதை வாங்கிக்கொடுத்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் இயக்கத்தில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடிக்க, அதர்வா, ரவி மோகன் மற்றும் ஸ்ரீலீலா போன்ற பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Bhaskaran) தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் (GV.Prakash) இசையமைத்துள்ளார்.

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இதன் காரணமாக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்றுவருகிறது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுதா கொங்கரா கலந்துகொண்டிருந்தார். அதில் அவர் பராசக்தி படம் தேர்தல் ஆண்டில் வெளியிடப்படுவது பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இன்று மாலை வெளியாகிறது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கிளிம்ஸ் வீடியோ

பராசக்தி படத்தின் ரிலீஸ் குறித்து மனம் திறந்த சுதா கொங்கரா :

அந்த நேர்காணலில் பராசக்தி படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டிருந்தார். மேலும் பேசிய அவர், “நான் பராசக்தி படத்தின் கதையை எழுதி அதை ஹீரோவிடம் சொன்னபோது, வரும் தேர்தல் ஆண்டில் வெளியிடுவதற்கு திட்டம் இல்லை. மேலும் ஒரு அரசியல் திரைப்படமாக இருக்கவேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை.இந்த படமானது முழுமையாக 1965ல் நடந்த ஒரு மாணவர்களின் இயக்கம் குறித்த படம்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகி உள்ள மிடில் கிளாஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

உலகத்திலே இதுதான் முதல் படமும் கூட. இந்த சம்பவம்தான் ஒருகாலத்தில் தமிழக வரலாற்றையே மாற்றியிருந்தது. மேலும் இப்படம் ஷூட்டிங்கிற்கு தாமதமானது, அதன் காரணமாக மட்டுமே வரும் 2026ம் ஆண்டு தேர்தல் ஆண்டில் வெளியாகிறது. நாங்களும் எதுவும் குறிப்பாக திட்டமிடவில்லை” என அவர் அதில் வெளிப்படையாக பேசியிருந்தார்.

பராசக்தி படத்தின் டீசர் வீடியோவை வெளியிட்ட இயக்குநர் சுதா கொங்கரா :

இந்த பராசக்தி படமானது இந்தி திணிப்பிற்கு எதிரான மாணவர்கள் போராட்டம் மற்றும் அரசியல் கலந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படமானது முதலில் 2026ம் ஆண்டு ஜனவரி 14ல் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 4 நாட்களுக்கு முன் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதன் காரணமாக வரும் 2026 ஜனவரி 10ம் தேதியில் விஜயின் ஜன நாயகன் படத்தின் ரிலீசிற்கு மறுநாள் வெளியாகுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10வது மாடியில் இருந்து விழுந்த நபர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரியம்..
60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்.. அவரது ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்..
விசா நேர்காணல்களை ரத்து செய்த அமெரிக்கா - இந்தியா கவலை
பாகிஸ்தானில் பணக்கார இந்து பெண்.. யார் இவர்? நிகர மதிப்பு என்ன தெரியுமா?