Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Karthik Subbaraj : இளையராஜா பயோபிக் நான் பண்ணியிருக்கவேண்டியது ஆனால்.. கார்த்திக் சுப்பராஜ் பேச்சு!

Karthik Subbaraj About Ilayaraja Biopic Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தமிழ் சினிமாவில், ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் தனுஷுடன் இளையராஜா பயோபிக் எடுக்கவேண்டியதை பற்றிக் கூறியுள்ளார்.

Karthik Subbaraj : இளையராஜா பயோபிக் நான் பண்ணியிருக்கவேண்டியது ஆனால்.. கார்த்திக் சுப்பராஜ் பேச்சு!
இளையராஜா - கார்த்திக் சுப்பராஜ்
barath-murugan
Barath Murugan | Published: 11 May 2025 19:57 PM

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பான் இந்திய நாயகனாகவும் இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் விரைவில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் குபேரா (Kuberaa). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து தமிழில் உருவாகியுள்ள இட்லி கடை படமும் வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படங்களைத் தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக்  (Ilayaraja biopic) திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகியது.

இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj ) இயக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், பின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என்று அறிவிப்புகள் வெளியாகியது. இந்த அறிவிப்புகள் பற்றியும், இளையராஜாவின் பயோபிக் இயக்க முடியாததைப் பற்றியும் கார்த்திக் சுப்பராஜ் பேசியுள்ளார். அதில் அவர் இளையராஜாவின் பயோபிக்கை இயக்கும் வாய்ப்பானது முதலில் எனக்குத்தான் கிடைத்தது, ஆனால் அது நடக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், “நான்தான் முதலில் இளையராஜா சாரின் பயோபிக் படத்தை இயக்கவிருந்தேன். அதற்காக இளையராஜாவை நேரில் சந்தித்து எல்லாம் பேசினேன், அந்த தருணங்களை என்னால் மறக்க முடியாதது என்றே கூறலாம். நான் பூரித்து இருந்தேன் இளையராஜாவின் பயோபிக்கை இயக்குகிறேன். ஆனால் அதன் பின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என அறிவிப்புகள் வெளியாகியது. ஒருவேளை அந்த வாய்ப்புகள் என்னிடம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஆனால் அந்த வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை, மீண்டும் கிடைக்காது” என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

கார்த்திக் சுப்பராஜின் ரெட்ரோ வெற்றி :

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ. நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் வெளியான இந்த படமானது சுமார் ரூ. 104 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்திருந்தார் என்றே கூறலாம். எதிர்பாராத வரவேற்பைப் பெற்ற இந்த படமானது திரையரங்குகளில் இன்று வரையிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!...
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!...
தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்...கனமழை எப்போது?
தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்...கனமழை எப்போது?...
டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்...
டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்......
உலர் பழங்கள்... நன்மைகள் மற்றும் அவற்றை எப்போது உண்ணலாம்?
உலர் பழங்கள்... நன்மைகள் மற்றும் அவற்றை எப்போது உண்ணலாம்?...
10 செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவை கண்காணிக்கிறோம் - இஸ்ரோ!
10 செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவை கண்காணிக்கிறோம் - இஸ்ரோ!...
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!...
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!...
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த BLA
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த BLA...
நெட் தேர்வு 2025: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!
நெட் தேர்வு 2025: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!...