டெல்லியின் துவார்காவில் உள்ள எச்.சி.எம்சி.டி மணிப்பால் மருத்துவமனையில், ஆசியாவிலேயே முதல் முறையாக மரணம் ஏற்பட்ட பின்னர் நோயாளியின் உடலில் ரத்த ஓட்டத்தை மீண்டும் இயக்கி, அவரின் உறுப்புகளை பாதுகாப்பாக பெறும் சாதனையை மருத்துவர்கள் செய்துள்ளனர். இந்தியாவில் உறுப்பு தான வரலாற்றில் இது அசாதாரண முன்னேற்றமாகும். 55 வயதான கீதா சாவ்லா, மோட்டார் நியூரோன் நோயால் படுக்கையிலே இருந்த நிலையில், நவம்பர் 5 அன்று ஏற்பட்ட சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.