ஆட்டோகிராஃப் படத்தில் அந்த முன்னணி நடிகர் நடிப்பதாக இருந்தது… சேரன் ஓபன் டாக்
Director Cheran: தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை கொடுத்த இயக்குநர்களில் ஒருவர் சேரன். அப்படி அவரே இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் படம் பலரது நாஸ்டாலஜிகளை தூண்டியது என்றே சொல்லலாம். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்தப் படத்தில் தனக்கு முன்பு வேறு ஒரு நடிகர் நடிக்க இருந்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

சேரன்
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் என்று வலம் வருபவர் சேரன் (Cheran). இவர் 1990-ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் படத்தில் நடிக்கத் தொடங்கினார். இவர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து 1993-ம் ஆண்டு வரை சில படங்களில் நடித்து வந்த நிலையில் 1997-ம் ஆண்டு பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் பார்த்திபன் நாயகனாகவும் மீனா நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அதே ஆண்டு பொற்காலம் என்றப் படத்தை இயக்கினார் சேரான் இந்தப் படத்தில் நடிகர்கள் முரளி மற்றும் மீனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இயக்குநர் சேரன் இயக்கத்தில் வெளியான வெற்றிக் கொடிக் கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, மாயக் கண்ணாடி, பொக்கிஷம் என பல ஹிட் படங்களை கொடுத்தார். குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
ஆட்டோகிராஃப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார்?
இந்த நிலையில் 2004-ம் ஆண்டு இயக்குநர் சேரன் இயக்கி நாயகனாக நடித்தப் படம் ஆட்டோகிராஃப். பலரின் பள்ளி வாழ்க்கை முதல் திருமண வாழ்க்கை வரை பல நிகழ்வுகளை நாஸ்டாலாஜிகளாக காட்டியிருந்தார் சேரன். இந்தப் படத்தில் வரும் நியாபம் வருதே மற்றும் ஒவ்வொரு பூக்களுமே ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் சேரன் அளித்த பேட்டி ஒன்றில் இந்தப் படத்திற்காக நடிகர் விஜயிடம் கதை கூறியதாகவும் அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜயின் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் நடிக்க முடியாமல் போனது என்றும் படம் வெளியான பிறகு விஜய் தன்னை அழைத்து வாழ்த்து தெரிவித்ததாகவும் சேரன் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சேரனின் இன்ஸ்டாகிராம் பதிவு:
மலையாளத்தில் நடிகராக அறிமுகம் ஆகும் சேரன்:
தமிழில் தொடர்ந்து நடிகராக நடித்த சேரன் தற்போது மலையாளத்தில் நரிவேட்ட என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆக உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகின்ற மே மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.