Dhanush: ரோட்டு கடையில் வடாபாவ் சாப்பிட தனுஷ்… இணையத்தில் வைரலாகும் ரியாக்ஷன் வீடியோ!
Dhanush Viral Video: கோலிவுட் சினிமாவில் சிறந்த நாயகனாக இருப்பவர் தனுஷ். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் தேரே இஷ்க் மே. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது, ரோட்டு கடையில் தனுஷ், க்ரித்தி சனோன் மற்றும் ஆனந்த் எல் ராய் ரோட்டு கடையில் வடாபாவ் வாங்கி சாப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ ரசிகர்களிடைய வைரலாகிவருகிறது.

தனுஷ் வைரல் வீடியோ
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் இந்தி மொழியை மையமாக கொண்டு வெளியாகியிருந்த படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த படமானது தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகியிருந்தது. கடந்த 2025ம் நவம்பர் 28ம் தேதியில் வெளியான இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் தனுஷ் 3வது முறையாக இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது அதிரடி காதல், மற்றும் எமோஷனல் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தின் ப்ரோமோஷனின் போது, படக்குழு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தனர்.
அந்த விதத்தில் வாரணாசி போன்ற பகுதிகளில் படக்குழு சிறப்பு தரிசனம் செய்திருந்தது. இந்நிலையில் அதே சமயத்தில் தனுஷ், க்ரித்தி சனோன் (Kriti Sanon) மற்றும் ஆனந்த் எல் ராய், சாலையோரம் உள்ள ஒரு கடையில் வடாபாவ் சாப்பிட்டுள்ளார். சாதாரண நபர்களை போல, ரோட்டுக்கடை வடாபாவ் (Vada Pav) தனுஷ் சாப்பிட்டு, அதற்கு கொடுத்த ரியாக்ஷன் தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் வித்தியாசமான கதையில்… ரியோ ராஜின் 6வது பட டைட்டில் அறிவிப்பு!
இணையத்தில் வைரலாகும் ரோட்டுக்கடையில் தனுஷ் வடாபாவ் சாப்பிடும் வீடியோ :
#Dhanush‘s Reaction to #KritiSanon..😄pic.twitter.com/441Uo1LNqI
— Laxmi Kanth (@iammoviebuff007) November 30, 2025
இந்த வீடியோவில் நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் மற்றும் ஆனந்த் எல் ராய் இடம்பெற்றுள்ளனர். இதில் க்ரித்தி சனோன் தனுஷிடம் வடாபாவ் எப்படி இருக்கிறது? என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த தனுஷ், “நம்பவே முடியவில்லை, அவ்வளவு ருசி” என கூறியுள்ளார். அந்த வீடியோவில் தனுஷ் கொடுத்த ரியாக்ஷன் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
தனுஷின் புது படங்கள் :
நடிகர் தனுஷின் கைவசத்தில் பான் இந்திய மொழி படங்கள் உள்ளது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என 3 மொழி படங்களை தனது கைவசம் தனுஷ் வைத்துள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் டி54. இந்த படத்தி விக்னேஷ் ராஜா இயக்கிவரும் நிலையில், ஷூட்டிங் விரைவில் நிறைவடைகிறது.
இதையும் படிங்க: மோகன் ஜி படம்னு தெரிஞ்சு இருந்தா பாடல் பாடி இருக்க மாட்டேன் – சின்மயி விளக்கம்
இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டி55, டி56 என அடுத்தடுத்த படங்களும் விரைவில் உருவாகவுள்ளது.