D55 Movie: தனுஷின் ‘டி55’ படத்தின் கதைக்களம் இதுவா? – ரசிகர்களை ஈர்க்கும் தகவல்!

D55 Movie Plot Update: தென்னிந்திய சினிமாவில் உச்ச நாயகனாக இருப்பவர் தனுஷ். இவர் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், டி55 என்ற படத்தில் இணைந்த்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், இப்படத்தின் ஜானர் குறித்த தகவல் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

D55 Movie: தனுஷின் டி55 படத்தின் கதைக்களம் இதுவா? - ரசிகர்களை ஈர்க்கும் தகவல்!

சாய் பல்லவி, தனுஷ் மற்றும் ஸ்ரீலீலா

Updated On: 

23 Feb 2026 22:28 PM

 IST

பான் இந்திய பிரபல கதாநாயகனாக இருப்பவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் மொழியை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் கதாநாயகனாக கலக்கிவருகிறார். கடந்த 2025ம் ஆண்டில் மட்டுமே இவரின் நடிப்பில் மூன்று மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. தமிழில் இட்லி கடை (Idli Kadai) படமும், தெலுங்கில் குபேரா (Kuberaa)மற்றும் இந்தியில் தேரே இஷ்க் மே (There Ishq Mein) என மொத்தம் மூண்டு திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் இட்லி கடை படமானது விமர்சனங்கள் ரீதியாக சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வசூல் ரீதியாக இந்தியில் வெளியான தேரே இஷ்க் மே வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படங்களின் ரிலீஸை தொடர்ந்து தனுஷ், இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh raja) இயக்கத்தில் “கர” (Kara) என்ற படத்தில் இணைந்தார்.

இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது டி55 (D55) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை அமரன் படத்தை இயக்கியிருந்த ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Pariasamy) இயக்கிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியுள்ளதாம்.

இதையும் படிங்க: குக் வித் கோமாளி ரசிகர்களை தயாரா? ‘குக் வித் கோமாளி சீசன் 7ல்’ எல்லாமே புதுசு!

தனுஷின் டி 55 படத்தின் கதைக்களம் :

இந்த் டி55 படத்தில் தனுஷுடன் நடிகர்கள் சாய் பல்லவி, மம்முட்டி, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.டேக். ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துவருகிறது. மேலும் இடர்க்கு இளம் இசையமைப்பாளர் சட்ட அப்யங்கர் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தத்க்கது.

இதையும் படிங்க: யார் ஹீரோ? ‘KH x RK’ திரைப்படம் குறித்து அனிருத் சொன்ன விஷயம்!

இப்படமானது தனுஷின் நடிப்பில் வெளியான படங்களை விடவும் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இப்படத்தில் தனுஷ் இதுவரை நடித்திடாத வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறாராம். மேலும் இதில் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில், முற்றிலும் ஆக்ஷன் நிறைந்த படமாகவே தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. ராயன் படத்திற்கு பின் “ஏ” சென்சார் கிடைக்கும் படமாக இது இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

டி55 திரைப்படம் குறித்து நடிகர் தனுஷின் தயாரிப்பி நிறுவனம் வெளியிட்ட பதிவு :

இப்படத்தின் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் சில வாரங்களில் இப்படத்தில் நடிகர் மம்முட்டியும் இணைந்துவிடுவாராம். அதைத் தொடர்ந்து, இப்படம் வரும் 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுவரும் நிலையில், இப்படத்தின் டீசர் 2026 ஜூலை மாதத்தில் தனுஷின் பிறந்தநாளில் வெளியாகும் என் அவட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்