Dhanush: அந்த காட்சியை மீண்டும் கண்முன்னே கொண்டுவந்தது.. ஜி.வி.பிரகாஷை பாராட்டி தனுஷ் வெளியிட்ட பதிவு!

Dhanush Praises GV Prakash : தனுஷ்,ஜி.வி.பிரகாஷ் இருவருமே நடிகர்களாக இருந்தாலும், நல்ல நண்பர்களும் கூட. அந்த வகையில் கர படத்திற்கும் ஜி.வி.தான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் நடந்த கர பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், மயக்கம் என்ன பட தீம் பாடலை இசையமைத்த நிலையில், அதற்கு பாராட்டி தனுஷ் பதிவை வெளியிட்டுள்ளார்.

Dhanush: அந்த காட்சியை மீண்டும் கண்முன்னே கொண்டுவந்தது.. ஜி.வி.பிரகாஷை பாராட்டி தனுஷ் வெளியிட்ட பதிவு!

தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ்

Updated On: 

20 Apr 2026 17:23 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் லீட் நாயகனாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் கர (Kara). இப்படத்தை போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க, தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் நிலையில், அவருடன் மமிதா பைஜூ (Mamitha Baiju) , கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் மொத்தம் நிகழ்ச்சியையும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியாக படக்குழு நேற்று 2026 ஏப்ரல் 19ம் தேதியில் நடத்தியிருந்தது.

அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் (GV Prakash Kumar) , தனுஷ் மற்றும் தனது இசையமைப்பில் வெளியான படங்களின் பாடல்களுக்கு இசையமைத்து கட்டியிருந்தார். அதிலும் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான “மயக்கம் என்ன” (Mayakkam Enna) என்ற படத்தின் தீம் பாடலை இசையமைத்திருந்தார். இந்நிலையில் அதை பாராட்டி தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சினிமாவில் 26 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பூரி ஜெகன்நாத்… நெகிழ்ந்து பேசிய விஜய் சேதுபதி!

ஜி.வி. பிரகாஷை பாராட்டி நடிகர் தனுஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

அந்த பதிவில் தனுஷ், “கர படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஜி.வி. பிரகாஷ் குமார், மயக்கம் என்ன பட தீம் பாடலிற்கு இசையமைத்த விதம், கார்த்திக்கின் முகத்தில் இலை விழும் அந்த காட்சியை மீண்டும் எனது கண்முன்னே கொண்டுவந்தது. உண்மையில் கலக்கிட்ட ஜி.வி” என அதில் அவர் பாராட்டியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தாய் கிழவி படம் போன்ற படத்தை பார்க்க ஆசையா? அப்போது இந்த தண்டட்டி படத்தை மிஸ் பண்ணிராதீங்க!

தனுஷின் இந்த கர படமானது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவருகிறது. இப்படமானது 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த விரிகுடா தாக்குதலை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷ் ஒரு திருடனாக நடித்திருக்கும் நிலையில், அவர் எதற்காக திருடுகிறார் என்பதே இப்படத்தின் மைய கருவாகும். அந்த வகையில் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 2026ம் ஆண்டில் தனுஷின் நடிப்பில் ஒரு சிறந்த படமாக இது அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..