Dhanush: அருண் விஜய்யின் ரெட்ட தல எப்படி இருக்கு? முதல் விமர்சனம் கொடுத்த தனுஷ்!
Dhanush About Ratta Thala Movie: கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அருண் விஜய். இவரின் முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் ரெட்ட தல. இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது, அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இந்த படத்திற்கு நடிகர் தனுஷ் முதல் விமர்சனம் கொடுத்துள்ளார்.

அருண் விஜய் மற்றும் தனுஷ்
நடிகர் அருண் விஜய்யின் (Arun Vijay) நடிப்பில் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் திரைப்படங்களானது உருவாகிவருகிறது. அந்த வகையில், இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் வணங்கான் (Vanangaan). இயக்குநர் பாலா இயக்கத்தில், கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் வெளியானது. இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும், அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் ரெட்ட தல (Retta Thala). இந்த படத்தை பிரபல தமிழ் இயக்குநரான கிரிஷ் திருக்குமரன் (Kris Thirukumaran) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இப்படமானது கடந்த 2024ம் இறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், தொடந்து ஷூட்டிங்கும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது.
மேலும் நடிகர் அருண் விஜய் மற்றும் தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியாக காத்திருக்கும் இட்லி கடை (Idli Kdai). இப்படத்தில் படத்திலும் வில்லன் வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இந்நிலையில் இட்லி கடை ப்ரோமோஷன் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ், அருண் விஜய்யின் ரெட்ட தல படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்துள்ளார். அது பற்றி பார்க்கலாம்.
இதையும் படிங்க : ஜிவி பிரகாஷ் குமார் – சைந்தவி விவாகரத்து வழக்கில் வரும் 30-ம் தேதி தீர்ப்பு
ரெட்ட தல படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த தனுஷ் :
அந்த நிகழ்ச்சியில் இட்லி கடை படம் குறித்து பல்வேறு விஷயங்களை நடிகர் தனுஷ் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து அருண் விஜயை பற்றி பேச தொடங்கிய தனுஷ், அவரின் ரெட்ட தல படத்தின் முதல் 30 நிமிட காட்சிகளை பார்த்ததாக கூறியுள்ளார். தனுஷ் அதில், “அருண் விஜய் சார், இட்லி கடை படத்தின் கதையை கூட நான் உங்களுக்கு சொல்லவில்லை, அதற்கு முன்னே இட்லி கடை படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டிங்க. அருண் விஜய் தற்போது ரெட்ட தல என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார், கூடிய சீக்கிரத்தில் அந்த படம் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க : ஒரு தரமான சம்பவம் இருக்கு… இட்லி கடை குறித்து பேசிய அருண் விஜய்
நான் அந்த படத்தை 30 முதல் 35 நிமிட காட்சிகளை பார்த்தேன். அசாதாரணமான திரில்லர் படமாக வந்திருக்கிறது, ரொம்ப நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள் அருண் விஜய் , நிச்சயமாக இந்த படமானது பிரம்மாண்ட வெற்றியை பெரும்” என தனுஷ் ரெட்ட தல படத்திற்கு விமர்சனம் கொடுத்துள்ளார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரெட்ட தல படம் தொடர்பாக தனுஷ் பேசிய வீடியோ :
“I watched 30 mins of ArunVijay’s #RettaThala, it’s an extraordinary thriller🔥”
– #Dhanush pic.twitter.com/GsmpomnKKC— AmuthaBharathi (@CinemaWithAB) September 24, 2025
இட்லி கடை திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் :
தனுஷ் மற்றும் அருண் விஜய்யின் கூட்டணியில் பிரம்மாண்ட கதைக்களத்தில் உருவாகியிருக்கும் படம் இட்லி கடை. உணவக பிரச்சனை என்ற மாறுபட்ட கதைக்களத்தில் இந்த இட்லி கடை படமானது உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் புக்கிங் வரும் 2025 செப்டம்பர் 28ம் தேதி முதல் தமிழகத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.