Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kuberaa : நாளை வெளியாகும் ‘குபேரா’ ட்ரெய்லர்.. படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!

Dhanush and Nagarjunas Kuberaa Movie : தெலுங்கு திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குநர் சேகர் கம்முலா. இவரின் இயக்கத்தில் தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் குபேரா. தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள இப்படத்திலிருந்து ட்ரெய்லர் அறிவிப்பு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Kuberaa : நாளை வெளியாகும் ‘குபேரா’ ட்ரெய்லர்.. படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!
குபேரா திரைப்படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 12 Jun 2025 21:46 PM

நடிகர்கள் தனுஷ்  (Dhanush) மற்றும் நாகார்ஜுனாவின் (Nagarjuna) முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் குபேரா (Kuberaa).  இந்த படத்தைத் தெலுங்கு பிரபல இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தக் குபேரா திரைபடமானது அரசியல் பின்புலன் கதைக்களம் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தனுஷின் இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தனுஷும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வந்த நிலையில், இறுதியாகக் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தில் இணைந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அதைத் தொடர்ந்து ஷூட்டிங்கும் 2025ம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவு பெற்றது.

இந்த படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவுடன் முக்கிய ரோலில் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) மற்றும் பாலிவுட் நடிகர் ஜிம் ஷார்ப் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் ரிலீசை தொடர்ந்து, ட்ரெய்லர் 2025, ஜூன் 13ம் தேதியில் ரிலீசாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

குபேரா படத்தில் தனுஷின் கதாபாத்திரம் :

தனுஷின் நடிப்பில் தெலுங்கில் உருவாகியிருக்கும் இப்படத்தில், அவர் தேவா என்ற ரோலில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடித்தார் தனுஷ் எந்த படத்திலும் நடிக்காத பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் மிகவும் வித்தியாசமாக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இவரின் கதாபாத்திரமும் இந்த குபேரா படத்தில் மிக முக்கியமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த படமானது அரசியல் கதைக்களம் சார்ந்து அமைந்துள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. குறிப்பாகத் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனுஷின் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்றே கூறலாம். இந்த குபேரா படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது. சுமார் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் இந்த படமானது உருவாகியிருக்கிறது.

சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ் :

தனுஷின் இந்த குபேரா படத்திற்கு சென்சார் குழு முதலில் யு/ஏ 13+ என்றும், படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 15 நிமித்தமாக இருந்தது. பின் மீண்டும் இப்படத்தின் ரன்னிங் டைம் குறிக்கப்பட்டு மொத்தமாக 3 மணி நேரம் 1 நிமிடமாக சென்சார் குழு படத்திற்கு ரீ- சென்சார் தரச் சான்றிதழை வழங்கியிருக்கிறது. இந்நிலையில், மொத்தமாகக் குபேரா படமானது 3 மணிநேரம் ஓடும் என்று உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், 2025, ஜூன் 18ம் தேதி படத்தின் ப்ரீ புக்கிங் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!...
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்...
அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் - அதிபர் டிரம்ப்
அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் - அதிபர் டிரம்ப்...