லியோ படத்தில் என் கதாப்பாத்திரத்தை கேட்டதும் பயந்துட்டேன் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி!

Dance Master Sandy: தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் சாண்டி. இவர் சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலம் ஆவதற்கு முன்பே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்பதே நிதர்சனமா உண்மை.

லியோ படத்தில் என் கதாப்பாத்திரத்தை கேட்டதும் பயந்துட்டேன் - டான்ஸ் மாஸ்டர் சாண்டி!

டான்ஸ் மாஸ்டர் சாண்டி!

Published: 

21 Aug 2025 17:07 PM

 IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) எழுதி இயக்கி கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் லியோ. இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்க நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் கூட்டணி இந்தப் படத்தி இணைந்ததை ரசிகரக்ள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் லியோ படத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் உடன் இணைந்து நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியன், மிஷ்கின், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், சாண்டி, பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஜனனி குணசீலன், இயல், முக்தர் கான், ராமகிருஷ்ணன், டென்சில் ஸ்மித். தினேஷ் மாஸ்டர், மதுசூதன் ராவ், வையாபுரி, புண்யா எலிசபெத், தவசி, ஜவஹர், மனேக்ஷா, சச்சின் மணி, சாந்தி, சாந்தி மாயாதேவி, முத்து கிருஷ்ணன், பூஜா ஃபியா, லீலா சாம்சன், தினேஷ் லம்பா, அனுராக் காஷ்யப், மாயா எஸ்.கிருஷ்ணன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.

லியோ படம் குறித்து டான்ஸ் மாஸ்டர் சாண்டி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்:

இந்த நிலையில் சமீபத்தில் நடன இயக்குநர் சாண்டி அளித்தப் பேட்டி ஒன்றில் லியோ படத்தில் நடித்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். அதில் அவர் கூறியதாவது, லோகேஷ் கனகராஜ் முதலில் என்னை நடிக்க கேட்ட போது நான் மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். பிறகு படத்தில் எனது கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என்பதை அவர் விளக்கியதும் நான் பயந்துவிட்டேன்.

மேலும் கதையைக் கேட்டு நான் பயந்ததும் நீ என்ன நம்புறியா என்று லோகேஷ் கனகராஜ் கேட்டார். நானும் உங்கள நம்புறேன் என்று அதில் நடித்தேன். அந்தக் கதாப்பாத்திரத்தைப் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றும் சாண்டி அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கவினின் கிஸ் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

நடன இயக்குநர் சாண்டியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… பூஜையுடன் தொடங்கியது அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் புது படம்

Related Stories
நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடல் முதலில் விக்ரம் படத்திற்காக பண்ணது – ஜிவி பிரகாஷ் குமார்
Sarathkumar: ரவிக்குமார் சார் ஷூட்டிங்கில் மைக்கை தூக்கி அடிப்பாரு.. சரத்குமார் சொன்ன உண்மை!
அருண் விஜய்யின் ரெட்ட தல படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் ஓபன் டாக்!
வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் – நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!
மாரி செல்வராஜ் உலகத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை – பைசன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி
Dhruv Vikram: அதற்காக எங்க அப்பா ரொம்ப அடிச்சாரு.. காரணம் எங்க அக்காதான்- துருவ் விக்ரம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!