கர்ப்பமாக இருப்பதை அறிவித்த மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி!
Madhampatty Rangarajs Second Wedding & Pregnancy Reveal : மெகந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் இன்று 2025, ஜூலை 27ம் தேதியில் ஸ்டைலிஸ்ட் ஜாய் கிரிசில்டா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் திருமணமான சிலமணி நேரங்களில், ஸ்டைலிஸ்ட் ஜாய் கிரிசில்டா, தான் கர்ப்பமாக இருப்பதாகப் பதிவை வெளியிட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா
சின்னத்திரை நிகழ்ச்சி மற்றும் சமுக ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் வைரலான, செஃப் ஆக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj ). இவர் சினிமாவிலும் கதாநாயகனாகப் படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெகந்தி சர்க்கஸ் (Mehandi Circus) . இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதிலும் இப்படத்திலிருந்து வெளியான “கோடி அருவி கொட்டுதே” என்ற பாடல் இன்றுவரையிலும் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ், இன்று 2025, ஜூலை 27ம் தேதி இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர் பிரபல ஸ்டைலிஸ்ட் ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் திருமணம் குறித்தான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அதைத் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜன் இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் திருமணம் புகைப்படங்களைப் பகிர்ந்து, தான் கர்ப்பமாக (Pregnancy) இருப்பதையும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இரண்டாவது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்… வைரலாகும் புகைப்படங்கள்
ஸ்டைலிஸ்ட் ஜாய் கிரிசில்டா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
இந்த பதிவில் மாதம்பட்டி ரங்கராஜனின் இரண்டாவது மனைவி, ஸ்டைலிஸ்ட் ஜாய் கிரிசில்டா, தங்கள் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது மக்கள் மத்தியில் படு வைரலாகி வ ருகிறது. இன்று 2025, ஜூலை 27ம் தேதியில்தான் திருமணமாகியிருக்கும் நிலையில், 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சுயசரிதை எழுதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!
மாதம்பட்டி ரங்கராஜின் முதல் திருமணம் :
செஃப் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியின் பெயர் ஸ்ருதி ரங்கராஜ், இவர் வழக்கறிஞர் ஆவார். இவரும் சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தனது குழந்தைகளுடனான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரின் முதல் மனைவி ஸ்ருதி கோவையில் பிரபல வழக்கறிஞர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ருதி இன்னும் தனது சமூக ஊடகங்களில், மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படங்களை எதுவும் நீக்காமல் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் தொடர்பான புகைப்படங்கள், மற்றும் அவரின் இரண்டாவது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தி இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.