மீண்டும் குப்பை எடுப்பதில் சண்டை போடும் பார்வதி… கனி வைத்த ட்விஸ்ட் – வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 16-வது நாளை எட்டியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து எதாவது ஒரு பிரச்னையை பார்வதி கொண்டுவருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார்.

மீண்டும் குப்பை எடுப்பதில் சண்டை போடும் பார்வதி... கனி வைத்த ட்விஸ்ட் - வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ்

Published: 

21 Oct 2025 10:44 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து வீட்டில் போட்டியாளர்கள் இடையே சண்டையும் தொடங்கியது. அதன்படி வீட்டில் உள்ள போட்டியளர்கள் இடையே சண்டை நிகழ்வது போல வீட்டில் உள்ளவர்கள் இடையே சண்டையை மூட்டிவிடும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவும் சில டாஸ்குகளை வைத்துள்ளது. அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீடு மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் டீலக்ஸ் வீடு, வீட்டு தல அறை என மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் டீலக்ஸ் அறையில் தங்கி இருப்பவர்கள் மிகவும் சொகுசாக வாழும் நிலையில் பிக்பாஸ் அறையில் வாழ்பவர்கள் அவர்களுக்கு தொடர்ந்து பணிவிடை செய்ய வேண்டும் என்பதே டாஸ்க்.

அதன்படி டீலக்ஸ் அறையில் உள்ளவர்களுக்கு உணவு சமைப்பதில் இருந்து, அவர்களின் வீட்டை சுத்தம் செய்வது, கழிவறையை சுத்தம் செய்வது என அனைத்து வேலைகளையும் பிக்பாஸ் டீலக்ஸ் அறையில் உள்ளவர்களுக்கு பிக்பாஸ் அறையில் உள்ளவர்களே செய்ய வேண்டும். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்த எஃப் ஜே மற்றும் சபரி இருவரும் பிக்பாஸ் டீலக்ஸ் அறைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு பதிலாக வியானா மற்றும் பார்வதி இருவரும் டீலக்ஸ் அறையில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்கு செல்கின்றனர்.

மீண்டும் குப்பை எடுப்பதில் சண்டை போடும் பார்வதி:

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து டீலக்ஸ் அறையை சுத்தம் செய்ய வியானா மற்றும் பார்வதி இருவரும் செல்கின்றனர். அப்போது குப்பை எடுக்க வேண்டும் என்று சுபிக்‌ஷா சொல்ல அதனையும் செய்ய மாட்டேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதனைப் பார்த்த வீட்டு தல கனி பார்வதியிடம் பேச அவர் அமைதியாக கொடுத்த வேலையை செய்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… சூர்யா 46 படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் பிரபல நடிகரின் மகன்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய், அஜித், சிவகார்த்திகேயன் யாருடன் மீண்டும் படம் நடிப்பீங்க? வித்யுத் ஜம்வால் சொன்ன விசயம்