பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை விட்டு தீடீரென வெளியேறிய போட்டியாளர் நந்தினி… காரணம் என்ன?

Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பல சர்ச்சையான நிகழ்வுகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் போட்டியாளர் ஒருவர் வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை விட்டு தீடீரென வெளியேறிய போட்டியாளர் நந்தினி... காரணம் என்ன?

நந்தினி

Published: 

11 Oct 2025 11:00 AM

 IST

தமிழ் சினிமாவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி இந்த 2025-ம் ஆண்டு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு பிடித்த பிரபலங்கள் யாரேனும் கலம்துகொள்வார்களா என்றும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி கடந்த 5-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு இந்த நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். பொதுவாக எல்லா பிக்பாஸ் சீசனிலும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் சண்டை இந்த சீசனில் போட்டி தொடங்கிய அன்று இரவே தொடங்கிவிட்டது. அந்த சண்டை புகைந்து புகைந்து அடுத்தடுத்து சண்டைகளும் உருவாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக இந்த சீசனில் போட்டியாளர்களின் தேர்வு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியதாகவும் தெரிவித்து இருந்தனர். இப்படி இருக்கும் சூழலில் அடுத்தடுத்த நாட்களில் போட்டியாளர்கள் அனைவரும் தொடர்ந்து சண்டைபோட்டுக்கொண்டு புரணி பேசிக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக முந்தைய சீசன்களில் குறிப்பாக பிக்பாஸ் தமிழ் சீசன் 3 தொடர்பான காட்சிகளை வெளியிட்டு இந்த சீசனில் தான் மிகவும் ஜாலியாக இருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்று தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேறிய நந்தினி:

ஒரு காமெடி இவ்வளவு சீரியசா ஆகுமா என்பது போல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நந்தினி குறித்து எஃப்ஜே கிண்டலடித்து மற்றவர்கள் அனைவரும் சிரித்ததைப் பார்த்த நந்தினி மிகவும் கோபப்பட்டு சத்தமாக கத்தி சண்டையிட்டார். அன்று இரவு அந்த பிக்பாஸ் வீடு முழுவதும் நந்தினி கத்திய சத்தம் தான் இருந்தது. சரி அது அவரது எமோஷ்னலை காயப்படுத்தியது போல என்று போட்டியாளர்களும் அமைதிக் காத்தனர்.

ஆனால் நேற்று இரவும் அதே மாதிரி வேறு ஏதோ ஒன்றிற்கு மிகவும் சத்தமாக கத்தி அனைவரிடமும் சண்டையிட்டார். தொடர்ந்து இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது இது பொய்யான வீடு என்று தெரிவித்தார். அதன்பிறகு பிக்பாஸ் நந்தினியை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்துப் பேசினார். அப்போது நந்தினி என்னால் இங்கு இருக்க முடியாது நான் வெளியே செல்கிறேன் என்று கூற சற்றும் யோசிக்காத பிக்பாஸ் அந்த இடத்தில் தான் கதவு உள்ளது நீங்க வேளியே வரலாம் என்று கூறிவிட்டார்.

இதை நந்தினி எதிர்பார்க்கவில்லை என்பது அவரது முகத்தைப் பார்த்ததும் தெரிகிறது. பிக்பாஸ் சமாதானம் செய்வார் அல்லது ஏதேனும் பேசுவார் என்று நந்தினி மட்டும் இல்லை ரசிகர்களும் அப்படி நினைத்துதான் அந்த காட்சியை பார்த்தார்கள். ஆனால் நந்தினியை வெளியேற சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Also Read… லைஃப்ல நீ ஒரு விசயத்த லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணா… டியூட் படத்தின் ட்ரெய்லர் இதோ!

இணையத்தில் வைரலாகும் நந்தினியின் வீடியோ:

Also Read… வேட்டுவம் என்ன மாதிரியான படமாக இருக்கும் – இயக்குநர் பா ரஞ்சித் ஓபன் டாக்